ஓசூர் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்..பரபரப்பு!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் என உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரியில் உள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கமாக விநியோகிக்கப்பட்ட குடிநீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் ஒரு சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் சிலருக்கு இதே போல் உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிக்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்றும் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு இதுவரை 27 பேர் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சின்ன எலசகிரி பகுதி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த மேலும் 24 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களும் ஓசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக உதவி ஆட்சியர் பிரியங்கா, மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு தண்ணீரில் கழிவு நீரில் கலந்துள்ளதா அல்லது வேறு காரணமா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications