பெரியார் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா.. பொங்கிய நெட்டிசன்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெரியாரின் வெண்கல சிலைக்கு டயர் அணிவித்து மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர்.
தமிழகத்தில் பெரியார் சிலைகள், எம்ஜிஆர் சிலைகள் அவமதிப்பு செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த செயலால் தமிழக மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியாரின் சிலை அவமதிப்பு செய்ததற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் சிலை அவமதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை ஒன்று உள்ளது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெரியாரின் வெண்கல சிலைக்கு டயர் அணிவித்து தீ வைத்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டனர்
பெரியாரின் சிலைக்கு தீ வைத்து அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

மக்கள் அதிர்ச்சி
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தமிழகத்தில் பெரியார் சிலைகள், எம்ஜிஆர் சிலைகள் அவமதிப்பு செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு இடத்தில் இதுபோல் சிலைகளை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்தால் வேறு இடத்தில் அவமதிப்பு தொடர்கிறது. இந்த செயலால் தமிழக மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
பெரியாரின் சிலை அவமதிப்பு செய்ததற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மூட நம்பிக்கையை தீ வைத்து எரித்தவரின் சிலையை தீ வைத்து எரிப்பதா? என்று கோபக்கணையை வீசி வருகின்றனர். நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா? நீங்கள் சிலையை வேண்டுமானால் அவமதிப்பு செய்யலாம். ஆனால் உங்களுக்காக பெரியார் வகுத்த சிந்தனைகளை அவமதிப்பு செய்ய முடியாது. அவை என்றும் மக்கள் மனதில் வாழும் என்று தெரிவித்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications