கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி கலைப்பு.. திமுகவில் ஐக்கியமான தம்பிகள்.. திணறும் சீமான்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ஏராளமான நிர்வாகிகள், மொத்தமாக திமுகவில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.
2024ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 8.19 சதவிகித வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றது அரசியல் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்தது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் சீமான் மீது அக்கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தால் சீமான் பின்னடைவை சந்தித்து வருவதாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரியார் மீது அடுக்கடுக்கான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.
இதனால் கடந்த 3 மாதங்களில் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர் மாதம் தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான நாம் தமிழர் கட்சியினர் விலகுவதாக அறிவித்தனர். முக்கிய பொறுப்பாளரான அரூர் சட்டமன்ற தலைவர் இளையராஜா விலகுவதாக அறிவித்தார்.
அதேபோல் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கதுரையும் விலகுவதாக அறிவிக்க, தொடர்ந்து சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டாக விலகுவதாக அறிவித்தனர். பின்னர் சேலம் மாவட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் பால்ராஜ் அசோகன், பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்தும் நாதக நிர்வாகிகள் விலகினர்.
அதேபோல் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கதுரையும்ஜ் விலகுவதாக அறிவிக்க, தொடர்ந்து சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டாக விலகுவதாக அறிவித்தனர். பின்னர் சேலம் மாவட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் பால்ராஜ் அசோகன், பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்தும் நாதக நிர்வாகிகள் விலகினர்.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் இருந்து மொத்தமாக விலகிய நாதக நிர்வாகிகள், தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலையில் இணைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நாதக நிர்வாகிகள் பலரும் கூண்டோடு விலகி வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நாதகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகியான ராஜீவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி கலைப்பு என்று பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications