நாம் தமிழர் ‘மாஜி’ நிர்வாகி சிவராமனின் தில்லாலங்கடி வேலை..மாணவிகள் காசிலேயே மெடல்! 13 மாணவிகள் பாவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி என்சிசி முகாமில் 8ஆம் வகுப்பு மாணவியை தொடர்ந்து, மேலும் 13 மாணவிகள் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமனால் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமகிருஷ்ணன் என்சிசி முகாம் என்ற பெயரில் செய்த பாலியல் அத்துமீறல்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் என்சிசி முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் 17 மாணவிகளை நான்கு நாட்கள் பள்ளியில் தங்க வைத்திருக்கிறார்கள். இதற்கான உரிய அனுமதியை பள்ளிக்கல்வித்துறை மட்டும் மாவட்ட என்சிசி தலைமையகத்தில் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகாமில் பயிற்சியாளரான சிவராமன் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதிகாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அந்த புகாரை மறைப்பதற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகமே உடந்தையாக இருந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
போலீசாரும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மாணவி மட்டுமல்லாது அதே முகாமில் கலந்து கொண்ட மேலும் 13 மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன், வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அவர் போலி என்சிசி நிர்வாகி என்பதோடு ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் காட்டி கமாண்டர் என கூறி ஏமாற்றி இருக்கிறார். மேலும் பள்ளியில் படித்தபோது சிவராமன் என்சிசி-யில் இருந்திருக்கிறார். அப்போது கிடைத்த அனுபவத்தை கொண்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தான் என்சிசி பயிற்சியாளர் எனக்கூறி போலியான ஆவணங்களை தயாரித்து மோசடி செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தற்போது பிரச்சினையில் சிக்கி இருக்கும் காந்திக்குப்பம் கிங்ஸிலின் பள்ளியில் என்சிசி பயிற்சியளிக்க ஒரு மாணவிக்கு 1500 ரூபாய் வசூல் செய்திருக்கிறார். அந்த பணத்திலேயே மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சில கல்வி நிறுவனங்களிலும் இதேபோல சிவராமன் முகாம் நடத்தி வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும் தான் அரசியல் கட்சி சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எனக் கூறி தனியார் பள்ளி நிர்வாகத்தினரை மிரட்டி பயிற்சி முகாம்களை சிவராமன் நடத்தி வந்திருப்பதாக மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த பள்ளிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் சிவராமன் வேலையை காட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது தேசிய மகளிர் ஆணையம். இதுகுறித்து தாமாக முன்வந்து ஆணையம் விசாரணையை தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையை அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து மூன்று நாளில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications