கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த ‘வீடு’ எப்படி கிடைச்சது? எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டிய புகழேந்தி.. குட்டு அம்பலமாகிடுச்சா!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : குற்ற உணர்வு உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் பார்ப்பதற்கு தயக்கம் காட்டுகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஈபிஎஸ் தரப்பினர், ஓபிஎஸ் ஆதரவாளர்களை கடுமையாக விமர்சிக்க, ஓபிஎஸ் தரப்பினர், ஈபிஎஸ் அணியினரை தாக்கிப் பேசி வருகின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லையா எனக் கேட்கும் அளவுக்கு இந்த மோதல் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஓபிஎஸ்ஸை கடுமையாக அட்டாக் செய்து பேசி வரும் கேபி முனுசாமியை குறிவைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளாசி வருகின்றனர்.

கிரேனில் ராட்சத மாலை.. பிரமாண்ட வரவேற்பு.. அட யாருப்பா இவரு? குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போனவராம்! கிரேனில் ராட்சத மாலை.. பிரமாண்ட வரவேற்பு.. அட யாருப்பா இவரு? குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போனவராம்!

துரோகி பேசக்கூடாது

துரோகி பேசக்கூடாது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய புகழேந்தி, "அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்பு ஒற்றை தலைமை என்கின்ற சர்ச்சையே, அர்த்த ராத்திரியில் ஆதாரம் இல்லாமல் கள்ளத்தொடர்பினால் பிறந்த குழந்தை தான் அது. ஆகவே கேபி முனுசாமி போன்ற துரோகிகள் இதுகுறித்து பேசக்கூடாது.

வீட்டை காலி செய்வாரா

வீட்டை காலி செய்வாரா

மேலும் பொதுக்குழுவை நடத்த விடாமல் குறுக்கீடு செய்தவரும் கேபி முனுசாமி தான். அப்போது தர்மயுத்தம் நடத்திய தியாகி என்றெல்லாம் கூறி, ஓபிஎஸ் உடன் இணைந்து ஆதாயம் பெற்று அவரால் சென்னை டெய்லர் சாலையில் சொகுசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து கொண்ட கேபி முனுசாமி அந்த வீட்டை காலி செய்ய வேண்டும்.

அதே வீடு ஈபிஎஸ்ஸுக்கு எப்படி?

அதே வீடு ஈபிஎஸ்ஸுக்கு எப்படி?

அதேபோல எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து, தான் ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபோது குடியிருந்த அரசு வீட்டை தனக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டு குடியிருக்கும் பழனிசாமியும் அதை காலி செய்ய வேண்டும். எனவே இவர்கள்தான் திமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் என்பது இப்போதே அம்பலமாகிவிட்டது.

குற்ற உணர்வில் ஈபிஎஸ்

குற்ற உணர்வில் ஈபிஎஸ்

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் துரோகிகளில் மிகச்சிறந்தவரான எடப்பாடி பழனிசாமி குற்ற உணர்வின் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு தயக்கம் இருப்பதன் காரணத்தினாலேயே சபாநாயகர் ஒதுக்கும் இருக்கைகளை மாற்ற வேண்டும் என துடிதுடிக்கிறார்கள்.

இடையூறுக்கு காரணமான 3 பேர்

இடையூறுக்கு காரணமான 3 பேர்

கட்சியின் இணைப்புக்கு இடையூறாக இருப்பவர்களில் முக்கியமானவர்களான கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள் இருப்பதால்தான் இணைப்புக்கு சாத்தியமே இல்லை என்று ஈபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.ஓபிஎஸ் எப்போதும் ஒற்றுமையே விரும்புபவர் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். கேபி முனுசாமி தனது சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனம்." எனத் தெரிவித்துள்ளார்.

English summary
OPS supporter Pugazhendhi has criticized that, Edappadi Palaniswami pleaded Chief Minister M.K.Stalin to re-allocate the government house he was living in when he was already CM. Thus, it has been exposed that EPS in secret contact with DMK, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X