ஆன்மா வீட்டுக்கு வரணும்.. விபத்தில் மகனை இழந்த பெற்றோர் செய்த பூஜை .. ஓசூர் சாலையை நனைத்த கண்ணீர்
கிருஷ்ணகிரி: ஓசூரில் நடு ரோட்டில் பெற்றோரும் உறவினர்களும் பூக்களை தூவி பூஜை செய்தனர். அப்போது அவர்கள் சிந்திய கண்ணீர் சாலையில் தெறித்தது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த சம்பவத்தை ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். எதனால் இந்த பூஜை, அந்த பெற்றோரின் கண்ணீருக்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.
ராஜசேகர், பெயரைப் போலவே ராஜா போல இருந்த இளைஞன். ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி மாருதிநகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் விஜயலட்சுமி தம்பதியின் மகன். தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

படித்து முடித்து விட்டு மிகப்பெரிய விமான நிறுவனத்தில் வேலைக்கு போக வேண்டும் என்பது ராஜசேகரின் கனவு. பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையில் நன்றாகவே படித்து வந்தார் ராஜசேகர். அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது. நாய் வடிவில் வந்த எமன் ராஜசேகரின் உயிரை பறித்துக்கொண்டான்.
அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி இரவு, ராஜசேகர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஓசூர் சிப்காட் காவல் நிலையம் அருகே சாலையில் படுத்திருந்த நாய் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறிய ராஜசேகர் கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து ராஜசேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகனின் மரணச்செய்தி ராஜசேகரின் பெற்றோர் துரைராஜ், விஜயலட்சுமியின் தலையில் இடியாக விழுந்தது. இறுதிச்சடங்குகள் முடிந்து கண்ணீர் மல்க மகனின் சடலத்திற்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினர் பெற்றோர்.
ஆனாலும் மகனை மறக்கமுடியவில்லை. ராஜசேகரின் தந்தை துரைராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று சாலையில் மலர்களை தூவி கண்ணீர் மல்க பூஜை செய்தனர்.
ராஜசேகரின் ஆன்மா சாலைகளில் சுற்றித்திரியாமல் வீட்டுக்கு வர வேண்டியும் பூஜைகளை செய்தனர். இது தங்களின் நம்பிக்கை எனவும் இதன் மூலம் உயிரிழந்த தங்களின் மகன் ஆத்மாவாக வீட்டிற்கு வருவார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மகனின் ஆன்மா வீட்டுக்கு வரவேண்டி நடுரோட்டில் பூஜை செய்த பெற்றோரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் கதையை கேட்ட பலரும் சோகத்தோடு கடந்து சென்றனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications