சசிகலாவுக்கு கார் வழங்கியது ஏன்... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.ஆர்.சம்பங்கி விளக்கம்..!
கிருஷ்ணகிரி: பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு இன்னோவா கார் கொடுத்ததன் மூலம் தமிழக அரசியல் களத்தின் லைம்லைட்டில் இடம்பெற்றிருக்கிறார் எஸ்.ஆர். சம்பங்கி.
Recommended Video

இந்நிலையில், சசிகலாவுக்கு கார் கொடுத்தது ஏன் என்பது பற்றி அவர் அளித்துள்ள விளக்கத்தில், சசிகலா சென்னை சென்று கொண்டிருந்த போது அவரது கார் பழுதானதால் மனிதாபிமான அடிப்படையில் தனது காரை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், சாலையில் செல்லும் போது வாகன பழுது ஏற்பட்டு யாராவது நின்றால் நீங்கள் உதவமாட்டீர்களா என்ற கேள்வியையும் முன்வைத்தார். சசிகலா காரில் அதிமுக கொடி கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தனது காரை வழங்கிய சம்பங்கி இவ்வாறு புதிய விளக்கம் ஒன்றை ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ளார்.
சசிகலாவுக்கு கார் கொடுத்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையிலேயே தவிர வேறு உள்நோக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுகவிலிருந்து சம்பங்கி நீக்கப்பட்டதாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பெயரில் அறிவிப்பு வெளியானது.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரிடம் பேசி சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார். தமிழக அரசியலுக்கும் இன்னோவா காருக்கும் ஏதோ ஒரு வகையில் பந்தம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications