Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணவக்கொலையில் ஈடுபட்ட சங்கர் அதிமுக கிளை செயலாளர் இல்லை.. ஆதாரங்களை வெளியிட்டு அதிமுகவினர் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் ஜெகன் என்ற இளைஞர், காதலித்து திருமணம் செய்துகொண்டதால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக கிளை செயலாளர் சங்கர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், சங்கர், அதிமுகவின் கிளைச் செயலாளர் இல்லை என அதிமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஊரில் அதிமுக கிளை செயலாளராக இருப்பவர் வேறொருவர் என்றும், சங்கர் அதிமுக உறுப்பினர் மட்டும் தான், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021 டிசம்பரில் நடைபெற்ற கட்சி தேர்தலின் அடிப்படையிலான நியமன அறிவிப்பை வெளியிட்டு, சங்கர் என்பவர் அங்கு அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஆணவப்படுகொலை

ஆணவப்படுகொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் (28) மார்ச் 21ஆம் தேதி மதியம் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜெகன் கல்லூரி மாணவியான சரண்யாவை காதலித்து வந்ததும், சரண்யா குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்டோர் ஜெகனை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

அதிமுக நிர்வாகி?

அதிமுக நிர்வாகி?

தனது மகளை காதல் திருமணம் செய்த ஜெகனை கொலை செய்த வழக்கில் சரண்யாவின் தந்தை சங்கர் சரணடைந்ததை தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆணவக்கொலையில் ஈடுபட்ட சங்கர், அதிமுக கிளை செயலாளர் என்று தகவல் வெளியானது. அவரது சட்டைப் பையில் ஜெயலலிதா படம் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கிளைக் கழகச் செயலாளர்?

கிளைக் கழகச் செயலாளர்?

இந்நிலையில், ஜெகன் ஆணவக் கொலை வழக்கில் கைதான சங்கர், அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்றும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சங்கரின் ஊரான பெரியமுத்தூர் புளுகான் கொட்டாய் கிளைக் கழக செயலாளராக இருப்பவர் கண்ணாயிரம். இவர் ஓபிஎஸ் அணியில் இருக்கிறாராம். அங்கு ஈபிஎஸ் அணி சார்பில் கிளைச் செயலாளர் யாரும் இல்லையாம். அதேபோல, அவதானப்பட்டி கோவில் கிளைக் கழக செயலாளராக இருப்பவர் முருகன்.

 அடிப்படை உறுப்பினர் மட்டுமே

அடிப்படை உறுப்பினர் மட்டுமே

ஆணவக்கொலை செய்த சங்கர் அதிமுக கிளைச் செயலாளர் எனப் பரவிவரும் தகவல்களை மறுத்து, அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 2021 டிசம்பரில் நடைபெற்ற கட்சி தேர்தலின் அடிப்படையிலான நியமன அறிவிப்பை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+