அரசின் ரகசிய ஆவணங்களை வெளிநாட்டுக்கு விற்க முயற்சி.. தமிழகத்தை சேர்ந்தவர் அதிரடி கைது.. ஷாக் தகவல்
கிருஷ்ணகிரி: அரசின் ரகசிய ஆவணங்களை வெளிநாடு ஏஜென்சிக்கு விற்க முயன்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் பெங்களூரில் உள்ள மத்திய பாதகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆய்வகத்தில் பணியாற்றியபோது அரசு ரகசியங்களை போட்டோ எடுத்து வைத்து விற்க முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக ரகசியம் காப்பதை காலம்காலமாக பின்பற்றி வருகின்றது. இந்த ரகசியங்கள் வெளியே கசிந்தால் எதிரிகள் சுதாரித்து கொள்வார்கள் என்பதால் தான் ரகசியம் காப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
இருப்பினும் கூட அவ்வப்போது சிலர் அரசின் ரகசியங்களை அறிந்து அல்லது கைப்பற்றி காசு பார்க்க நினைப்பது உண்டு. இத்தகைய தேசவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் போலீசார் அதிரடியாக கைது செய்வது அவ்வப்போது நடந்து வருகிறது.

என்ஜினீயரிங் படித்தவர்
இந்நிலையில் தான் அரசின் ரகசியங்களை வெளிநாட்டு ஏஜென்சிக்கு விற்க முயற்சி செய்ததாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர் யார்? இவர் என்ன செய்தார்? எப்படி கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார்.

செல்போனில் போட்டாவாக..
இதையடுத்து அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆய்வகத்தில் பணியாற்றியுள்ளார். இங்கு அவர் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்துள்ளார். இந்த வேளையில் அவர் யாருக்கும் தெரியாமல் அரசின் ரகசிய ஆவணங்களை செல்போனில் போட்டோக்களாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மோப்பம் பிடித்த மத்திய அமைச்சகம்
இதற்கிடையே ஒப்பந்த காலம் முடிந்ததால் அவர் பணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தான் தன்னிடம் உள்ள அரசின் ரகசியங்களை அவர் விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதாவது ரகசியங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு விற்க முயன்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தகவல் சென்றது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதிரடி கைது
இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மதகொண்டப்பள்ளி அருகே உதயகுமாரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உதயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இருப்பினும் இவர் யாருக்கு விற்பனை செய்ய முயன்றார். அந்த ஏஜென்சிகளின் பெயர்கள் உள்ளிட்ட எந்த விபரங்களும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications