டீசன்ட் லுக்.. கையில் கட்டப் பை.. அடுத்து சரோஜா செஞ்ச காரியத்தை பாருங்க!
புடவை திருடிய பெண்ணை கடைக்காரர் சரமாரியாக அடித்தார்.
Recommended Video

சூளகிரி: பார்க்க டீசன்ட்டா இருக்கிறவங்கதான் பெரும்பாலும் மொள்ளமாரித்தன காரியத்துல இறங்குறாங்க. இப்படித்தான் நம்ம சரோஜாவும் சிக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள கிராமம் அட்டகுறிக்கி. இங்கு வசித்து வருபவர்தான் சரோஜா. 30 வயசான சரோஜா பார்க்க ரொம்ப டீசன்ட்டா இருக்கிறார். இவர், சூளகிரியில் ஒரு பிரபலமான ஜவுளிக்கடைக்கு போனார். கையில் ஒரு கட்டை பையை வைத்து கொண்டு கடைக்குள் நுழைந்தார்.

கட்டைப் பைக்குள் புடவை
பிறகு கடையில் புடவைகளை பார்க்க வேண்டு என்று கூறியதால் நிறைய புடவைகள் அவர் பார்ப்பதற்காக எடுத்து போடப்பட்டது. கடைசியில் யாரும் கவனிக்காத போது, 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நியூ டிசைன் புடவை ஒன்றினை எடுத்து தனது கட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு பணமும் தராமல் நைசாக வெளியே போய்விட்டார்.
[பீர் பாட்டிலை உடைத்து.. மிக குரூரமாக கொல்லப்பட்ட மதுரை கலைச்செல்வி.. மெரீனா பீச் பயங்கரம் ]

வேற புடவை எடுத்துக்கட்டுமா?
புடவையை ஆட்டைய போட்டு போன சரோஜா திரும்பவும் அதே கடைக்குள் கொஞ்ச நேரத்திலேயே நுழைந்தார். அபேஸ் பண்ண புடவையை பையிலிருந்து வெளியே எடுத்துகொண்டு பில் கவுண்ட்டருக்கு போனார். அங்கே இருந்தவர்களிடம் புடவையை காண்பித்து "இந்த புடவையை போன வாரம் இங்கதான் வந்து வாங்கிட்டு போனேன். ஆனா அதுக்கான ரசீது வீட்டிலயே இருக்கிறது. இந்த புடவையை மாத்திக்கிட்டு வேற புடவையை எடுத்துட்டு போகட்டுமா?" என்று கேட்டுள்ளார்.

விழித்த சரோஜா
புடவையை வாங்கி பார்த்த கடைக்காரர்கள், "ஏம்மா.. இந்த வெரைட்டியே இப்பதான் புதுசா வந்திருக்கு. அதுவும் தீபாவளிக்காக நேத்துதான நாங்களே இந்த புது டிசைனை கடைக்கு எடுத்துட்டு வந்தோம். அது எப்படி போன வாரம் நீ இங்கே வந்து வாங்கியிருக்க முடியும்? வாய்ப்பே இல்லையே" என்று துளைத்தெடுத்தனர்.
கேள்வி மேல் கேள்வி கேட்க சரோஜா திருதிருவென முழிக்க ஆரம்பித்தார்.

வெளுத்த கடைக்காரர்
தடுமாறி தடுமாறி பதில் அளிக்கவும் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள் நூதன முறையில் திருட்டை அரங்கேற்றிய சரோஜாவுக்கு தர்ம அடி கொடுத்தனர். கடையில் சரோஜா புடவையை திருடி சென்றது முதல், திரும்பி வந்து வேற புடவையை மாற்றி தர சொன்னது, கடைக்காரர் வெளுத்தது வரை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது. இப்படி சரோஜா அடி வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அடித்திருக்க கூடாது
சரோஜாமேல் தப்பே இருந்தாலும் கடைக்காரர் இப்படி அவரை அடித்திருக்க கூடாதுதான். யாரையும் யாருக்குமே அடிக்க உரிமையே இல்லாதபோது ஒரு பெண் என்றும் பாராமல் கடைக்காரர் இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது. வேண்டுமானால் போலீசில் சரோஜா மீது உரிய புகார் கொடுத்திருக்கலாம். ஆனாலும் தீபாவளி அதுவுமா இதெல்லாம் தேவையா சரோஜா?
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications