பெங்களூர் ஐடி ஊழியர்கள் சென்ற கார்.. ஓசூரில் ஏரிக்குள் பாய்ந்தது... ஒருவர் கூட உயிருடன் இல்லை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெங்கடாபுரம் ஏரிக்கரையில் கார் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் உள்பட 3 இளைஞர்கள் காருடன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிககை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியூர் செல்வது, சொந்த ஊர் செல்வது, சுற்றுலா செல்வது என பலரும் பயணத்தை விரும்புகிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான அக்டோபர் 30ம் தேதி பெங்களூர் ஐடி ஊழியர்கள், ஓசூர் அருகே காரில் வந்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். எப்படி விபத்து ஏற்பட்டது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே உமாசங்கர் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் மகேஷ்(வயது25). பெங்களூர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதுபோல் ஓசூர் ஆவலப்பள்ளி சாலை ஜி.கே.டி. நகரை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் லிண்டோ(25). சின்ன எலசகிரியை சேர்ந்தவர் அங்கப்பா என்பவருடையது மகன் யோகேஸ்வரன்(25). தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்து வந்தார். மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன் ஆகிய 3 இளைஞர்களும் நண்பர்களாவர்.
இவர்கள் 3 பேரும் ஒசூர் அருகே வெங்கடாபுரம் ஏரிக்கரையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தனர். லிண்டோ காரை ஓட்டி சென்றார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் 3 பேரும் காருடன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் கிரேன் உதவியுடன் ஏரியில் மூழ்கிய காரை மீடடார்கள். அப்போது காருக்குள் பிணமாக கிடந்த மகேஷ் மற்றும் லிண்டோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான யோகேஸ்வரன் உடலை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று யோகேஸ்வரன் உடலை தீயணைப்பு படையினர் கண்டுபிடித்து மீட்டனர். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள், காரில்சென்ற நண்பர்கள், ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications