குடிச்சுட்டு கும்மாளம் அடிப்பவர்கள் எம்ஜிஆர் ஆகிட முடியுமா..விஜய் மீது கேபி முனுசாமி கடும் விமர்சனம்
கிருஷ்ணகிரி: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. எம்ஜிஆர் பாணியில் தீவிர திமுக எதிர்ப்பு அரசியலுடன் தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி எம்ஜிஆர் குணாதிசயங்களுடன், விஜய்யை மறைமுகமாக ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாளை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, மக்கள் அவரை நேசித்தார்கள். அதனால் தான் அண்ணா பெயரில் கட்சியை உருவாக்கினால் கூட எம்ஜிஆர் தான் அந்த கட்சிக்கு சொந்தக்காரர் என்று நினைத்தார்கள். அந்த நடிகர் எங்கே, இப்போதுள்ள நடிகர்கள் எங்கே.

சாராயம் குடிப்பவர்கள்
இப்போதுள்ள நடிகர்கள் உடனே பாட்டிலை திறந்துவிடுவான். சாராயத்தை குடித்துவிடுவான். 4 பொண்ணுகளுடன் டான்ஸ் ஆடுவான். 100 பேரை அடிப்பது போல ஷோ காட்டுவான். அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார்கள். அவர்கள் என்ன தொழிலில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை நேசிக்கும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும். ஏழை மக்களின் உணர்வுகளை, நிலைகளை அறிந்து அவர்களுக்காக போராடும் சிந்தனை உள்ள தலைவன் நாட்டிலேயே கட்சி நடத்தி ஆட்சிக்கு வரவேண்டும்.
தன்னுடைய சுய முயற்சியால் கலைத்துறையில் பயணித்து அரசியலுக்கு வந்தபோது கூட கலைத்துறையில் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் தான் புரட்சி தலைவர் நடித்துள்ளார். குடித்துவிட்டு கும்மாளம் போடும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. குடிப்பவர்களை திருத்தும் கதாபாத்திரத்தில் தான் எம்ஜிஆர் நடித்துள்ளார். படத்திலும் நல்லவர், படத்திலும் அரசியலிலும் தாய் உள்ளத்துடன் இருந்தவர்.
எம்ஜிஆரின் பெருமைகள்
தற்போதுள்ள எந்த நடிகனாவது அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்துள்ளார்களா. தன் சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர் மக்களுக்கே கொடுத்துள்ளார். அதனால் தான் அவரை எட்டாவது கொடை வள்ளல் என்றனர். எதிரிகள் கூட அவரை தவறு சொல்ல முடியாது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் கல்வி செலவை கூட எம்ஜிஆர் கொடுத்ததாக அவரே மேடையில் கூறியுள்ளார். எதிரியையும் கருணையுடன் பார்த்த நாட்டின் ஒரே தலைவர் அவர் தான்.
மக்களின் தேவைகளை
ஏசு பிரானை நாம் நேரடியாக பார்க்கவில்லை. அவரின் கருத்திற்கு கருவாக இருந்தவர் எம்ஜிஆர். அந்த சிந்தனையுடைய தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கி, அதே தாய் உள்ளத்தோடு ஒவ்வொரு தொண்டரையும் வளர்த்தெடுத்தார். அப்படி உருவாக்கிய தலைவரின் பிறந்தநாளில் புரட்சித் தலைவரின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று நாம் சபதம் ஏற்போம். மக்களை நேசிக்கும், தாய் உள்ளத்துடன் இருக்கும் ஆட்சி வர வேண்டும். மக்களை பாதுகாத்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி வர வேண்டும்" என்றார்.
-
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications