கிருஷ்ணகிரியில் இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு.. மனைவி செய்த காரியம்.. மலைத்த பார்த்த ஓசூர் மக்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு பரபரப்பை தந்துவிட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வந்தாலும், இந்த அதிர்ச்சி சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் அங்கு நீங்கவில்லை.. என்னதான் நடந்தது கிருஷ்ணகிரியில்? யாரிந்த பெண் முத்துலட்சுமி?
ஓசூரில் பார்வதி நகரில் வாழ்ந்து வரும் தம்பதி சரவணன் - முத்துலட்சுமி.. சரவணனுக்கு 25 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.

முத்துலட்சுமியுடன் திருமணமாகி 4 வருடங்களாகின்றன.. இந்த தம்பதிக்கு மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்..
வெளிப்பக்கம் பூட்டப்பட்ட கதவு
சரவணனின் குடும்பம் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தது.. ஆனால், திடீரென இந்த குடும்பமே ஒரே நாளில் நிலைகுலைந்துவிட்டது.. நேற்று விடிகாலையில், சரவணனின் அம்மா மங்கம்மாவின் திடீர் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, வீட்டுக்குள் பார்த்தபோது, சரவணன் ரத்தத்தில் மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
ஆனால், சரவணனின் பக்கத்து ரூம் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.. உள்ளிருந்து குரல் கேட்கவும், அக்கம்பக்கத்தினர் அதை திறந்துள்ளனர்.. அப்போதுதான் மங்கம்மா அந்த அறையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.. யாரோ மங்கம்மாவை ரூமில் வைத்து வெளிப்பக்கமாக பூட்டியதாக கூறியிருக்கிறார்.. பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து கதறி அழுதார்.
கணவர் சரவணன் பரிதாபம்
இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையை துவங்கியதுமே, முத்துலட்சுமி மாயமாகி இருந்தது தெரியவந்தது.
உடனே அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது, அந்த தெருவின் மூலையில் முத்துலட்சுமி ஒருவருடன் பதட்டமாக நடந்து செல்வது தெரியவந்துள்ளது.. உடனே அவர்களை விரட்டிய போலீசார், முத்துலட்சுமியுடன் சேர்த்து சூர்யா, சக்தி, சந்தோஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்..
முதல் விசாரணையே முத்துலட்சுமியிடம் ஆரம்பமானது.. அப்போதுதான் தன்னுடைய காதல் கதையை போலீசாரிடம் சொன்னார்.
10ம் வகுப்பு பழைய காதல்
ஸ்கூல் படிக்கும்போதே சூர்யாவும், முத்துலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள்.. 10ம் வகுப்பில் மலர்ந்த காதல் இதுவாகும்.. ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாராம் முத்துலட்சுமி.. ஆனாலும், திருமணத்திற்கு பிறகும் பழைய காதலன் சூர்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்..
இந்த விஷயம் சரவணனுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்ததால், வீட்டில் அடிக்கடி புயல் உருவாகி வந்தது... நாளுக்கு நாள் தகராறு வலுத்துவிடவும், கணவனை கொன்றுவிடுவதென முத்துலட்சுமி முடிவுசெய்தார்.
மாமியார் மங்கம்மா
இதற்காக கொலை திட்டத்தை சூர்யாவுடன் சேர்ந்து நடத்த முடிவு செய்தார்.. "இரவு நேரத்தில் சரவணனை கொன்றுவிடலாம்.. கதவை திறந்து வை, எல்லாம் நான்தான் பார்த்துக்கிறேன்" என்று சூர்யா முத்துலட்சுமியிடம் சொன்னாராம்..
அதன்படியே, நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கதவை திறந்து வைத்தார் முத்துலட்சுமி.. உடனே சூர்யா தன்னுடைய நண்பர்கள் சக்தி, சந்தோஷ் இருவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.. சரவணனின் அம்மா மங்கம்மா தூங்கி கொண்டிருந்த முத்துலட்சுமி வெளியில் இருந்து பூட்டிவிட்டார்.. பிறகு மூன்றுபேரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சரவணனை அடித்தே கொன்றனர்.
பாவம் அந்த குழந்தைகள்
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கள்ளக்காதல் ஜோடி உட்பட நண்பர்கள் அனைவருமே ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்..
தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல், சரவணனின் 2 பிஞ்சு குழந்தைகளும் கண்ணீருடன் தவித்து வருகின்றன.. இந்த சம்பவம் தற்போது ஓசூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications