நானா தற்குறி? சினிமாவில் விஜய் ஆடிக்கொண்டிருந்தபோது தமிழருக்காக களம் கண்டது நான்! வேல்முருகன் ஆவேசம்
கிருஷ்ணகிரி: நான் தற்குறியா... பள்ளி மாணவர்களை வைத்து நமக்கு பதில் சொல்ல வைக்கிறார்கள் பாவம். சினிமாவில் நீங்கள் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழர் விடுதலைக்காக களம் கண்டவர்கள் நாங்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காட்டமாக தவெக தலைவர் விஜயை விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் இந்த மண்ணின் வாழ்வுரிமைகளுக்காக களம் கண்டார்களே தவிர எந்த ரசிகையும், எந்த நடிகனும் களம் காணவில்லை. இந்த உண்மையை உடைத்துப் பேசும்போது பல பேருக்கு ஆத்திரம் பொங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை வைத்து நமக்கு பதில் சொல்ல வைக்கிறார்கள் பாவம்.

நாங்கள் தற்குறியா.. தற்குறி என்று எங்களை சொல்லக்கூடிய தற்குறிகளுக்கு நாங்கள் சொல்கிறோம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வரலாற்றை, வேல்முருகன் டி என்கிற பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே. அதைப் பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் தற்குறிகளே. ஆனால் இன்னைக்கு தற்குறிகள் கேட்கிறார்கள் வேல்முருகன் யாரென்று.
நீங்கள் எல்லாம் சினிமாவில் இருந்தபோது, தமிழர் விடுதலைக்காக களம் கண்டு தமிழ்நாட்டில் பணியாற்றிவன் இந்த வேல்முருகன். நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. வாங்கள் பார்ப்போம், விவாதிப்போம். மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். யார் தற்குறி. சீட்டு எழுதி, மாணவர்களை கூப்பிட்டு, தேர்ந்தெடுத்து அதில் பேச வைக்கிறார்கள்.
எங்க அண்ணா.. உங்க நொண்ணா.. என்று கூறுகிறார். உங்கள் படத்தில் முழுக்க முழுக்க முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள், தேச விரோதிகள் என்று காண்பித்தீர்கள். ஆனால், இன்று அதே முஸ்லிமை மேடையில் கூப்பிட்டு வந்து நிறுத்தி கட்டிப் பிடிக்கிறீர்கள், அன்பைப் பரிமாறுகிறீர்கள். அவர்களிடம் மைக்கை கொடுத்து பேச வைக்கிறீர்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் கொடுத்த குளிர்பானங்களை வைத்துக் கொண்டு வேல்முருகன் நடிக்கவில்லை. எச்சரிக்கை செய்கிறோம். பொதுமக்கள் சொல்லட்டும் வேல்முருகன் பேசியது தவறு என்று. பொதுமக்கள் தான் எனக்கு எஜமான். அவர்கள்தான் எனக்கு ஓட்டு போடுகிறார்கள். நீங்கள் யார். தனிமனித ஒழுக்கம் உள்ளவரா, வரி செலுத்துகிறீர்களா. டாடி மம்மி வீட்டில் இல்லை. தடை போட யாரும் இல்லை என்ற பாட்டை தமிழ் மக்கள் ஆதரிக்கிறீர்களா.
யாரோ ஒரு தொழிலதிபர் சால்வை போர்த்தி, பரிசு கொடுக்கிறார் என்றால் அவர் உங்கள் பிள்ளையை கட்டிப்பிடிக்க அனுமதிப்பீர்களா. ஒரு பெண் வயது மூப்படைந்த பிறகு எந்த சினிமா காரர்களையும் கட்டிப் பிடிப்பதையோ, ஹார்ட்டின் விடுவதையோ அனுமதிக்க கூடாது. இதனை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு கட்சித் தலைவனாக அறிவுரை சொன்னேன்.
150 தமிழ் தேசிய அமைப்பு, பெரியாரிய அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துகிறேன். இவர்கள் எல்லாம் அறிவில்லாமல் என் தலைமையில் இயங்குகின்றனரா என்று காட்டமாக பேசினார்.
-
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க












Click it and Unblock the Notifications