கிருஷ்ணகிரி நவீனாவுக்கு வந்த ஆத்திரம்.. கணவனுக்கு ஒரே அடி.. உயிருடன் இல்லை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்த கணவனை உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரே அடியில் காலி செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மதுப்பழக்கமும், சந்தேகமும் வறுமையும் தமிழ்நாட்டில் பல்வேறு குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. தினமும் குடித்துவிட்டு வரும் கணவன் தகராறில் ஈடுபடுவதை கண்டு மனம் வெதும்பி சில பெண்கள் ஆத்திரத்தில் கணவனை அடித்துக் கொன்று விடுகிறார்கள்.. அதேபோல் சில கணவன்கள் குடிபோதையில் மனைவி என்றும் பாராமல் இரக்கமே இல்லாமல் சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்வதும் பல இடங்களில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குடித்துவிட்டு தினமும் தகராறில் ஈடுபட்ட கணவனை கன உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை செய்திருக்கிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே முத்துரையைச் சேர்ந்த 42 வயதாகும் பிரகாஷ்ரெட்டி தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார் விவசாயியான இவருடைய மனைவி நவீனாவுக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். பிரகாஷ்ரெட்டிக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறதாம். அப்படி மது அருந்திவிட்டு வருவது தட்டி கேட்டால் மனைவியிடம் குடும்ப தகராறு ஈடுபடுவதும் பிரகாஷின் வாடிக்கையாம்.
அப்படித்தான்.. ஏப்ரல் நான்காம் தேதி இரவு விவசாயி பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நவீனா அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி ஒரே ஒரு அடி அடித்தார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் பிரகாஷ். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரகாஷ்ரெட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரகாஷ்ரெட்டியின் தந்தை நாராயணரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நவீனாவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு தினமும் நவீனாவை அடித்துத் துன்புறுத்தியதும், இதனால் ஆத்திரத்தில் அவர் பிரகாஷ்ரெட்டியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. மனைவியே கணவனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications