கிருஷ்ணகிரி தீபா.. கடைசியாக நண்பனுக்கு போன போன் கால்.. ஊத்தங்கரையில் என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கஞ்சனூரை சேர்ந்த தீபா என்பவர் போச்சம்பள்ளியில் தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கேண்டீனில் வேலை செய்து வந்தார். இவரை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது அவர் தனது நண்பரான கவுதமுக்கு போனில் அழைத்து மர்ம நபர்கள் பின்தொடர்வது குறித்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கஞ்சனூரை சேர்ந்த மாதேஷ் என்பவருடைய மனைவி தீபா (வயது 32). இவர் போச்சம்பள்ளியில் தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கேண்டீனில் பணியாற்றி வந்தார்.மாதேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். மாதேஷ் தீபா தம்பதிக்கு கவுசிக்தரன் (12) என்ற மகனும், ஷிவானி (10) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தீபா பணியை முடித்து கொண்டு வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் தீபாவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதை பார்த்து பயந்து போனா தீபா. தனது நண்பரான பள்ள சூளக்கரையை சேர்ந்த கவுதம் (22) என்பவருக்கு போனில் அழைத்து, மர்ம நபர்கள் பின் தொடர்வது குறித்து கூறினாராம்.
அப்போது கவுதம், நான் உனது பின்னாலேயே வருகிறேன். அதனால் நீ பயப்படாமல் செல் என்று அந்த பெண்ணிடம் கூறி உள்ளார். இதனால் தீபா ஸ்கூட்டரில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாராம். இதனிடையே தீபாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கஞ்சனூர் முருகன் கோவில் அருகில் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்து தீபா சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த அந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் தீபாவின் செல்போனில் இருந்து கவுதமிற்கு போன் வந்தது. அப்போது தீபா தன்னை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டதாக கூறி அலறி துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம் அங்கு வேகமாக வந்தார். அப்போது அவர் தீபாவின் உடலில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடுவதை கண்டு கதறி அழுதார். அங்கு படுகாயங்களுடன் கிடந்த தீபாவை மீட்ட கவுதம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீபாவின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக யாரெல்லாம் பேசினார்கள் என்றும், அவரது ஸ்கூட்டரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications