• search
கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குளிக்க போன தீபா.. "உள்ளாடையை" வாயில் திணித்து அன்று.. ஆடு மேய்க்க போன லட்சுமி.. கொடுவாளால் இன்று..!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி ஆடு மேய்க்கப் போன லட்சுமி இரக்க குணம் நிறைந்தவராம்.. பசிக்கு சாப்பாடு வாங்கி தந்துள்ளார் இளைஞருக்கு.. ஆனால், கடைசியில் கொலை வரை சென்றுவிட்டது..

2 வருடத்துக்கு முன்பு, மாவட்டம் கொல்லிமலையில் ஒரு கொடூர சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணின் பெயர் தீபா.. 25 வயதாகிறது.. ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து கொண்டு பக்கத்தில் இருந்த காட்டுக்கு போயுள்ளார்.

கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்.. 4-வது எம்.பி. சீட் யாருக்கு? இன்னமும் மல்லுக்கட்டும் ஜேடிஎஸ்-காங். கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்.. 4-வது எம்.பி. சீட் யாருக்கு? இன்னமும் மல்லுக்கட்டும் ஜேடிஎஸ்-காங்.

ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பவே இல்லை.. இதனால் பதறிபோன உறவினர்கள் தீபாவை காப்புக் காட்டிற்கு போனார்கள்..

தீபா

தீபா

அங்கே தீபாவின் சடலத்தை கண்டுபிடித்தனர்.. தீபாவின் பாவாடையை கழட்டி, அதை அவர் வாயிலேயே திணித்து பலாத்காரம் செய்திருந்தனர்.. அந்த நபர் யார் என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது, சற்று அதிர்ந்துதான் போனார்கள்.. காரணம், 25 வயசு தீபாவை, பலாத்காரம் செய்தது 17 வயது சிறுவன் அருண் என்பது தெரியவந்தது.. பலாத்காரம் செய்து கொலையும் செய்தது ஒரு சிறுவனா? என்று அறிந்து கொல்லி மலையே ஆடிப்போய் விட்டது.

 குளித்து கொண்டிருந்த தீபா

குளித்து கொண்டிருந்த தீபா

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, தீபா ஓடையில் குளிப்பதை மறைந்து நின்று அருண் பார்த்துள்ளான்.. அருகே சென்று, தன் ஆசைக்கு இணங்குமாறு அழைக்கவும் செய்திருக்கிறார்... அதிர்ச்சி அடைந்த தீபா, அருண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு, இந்த வயசில் இப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்று அட்வைஸ் தந்து வீட்டுக்கு விரட்டி விட்டுள்ளார்... இதை மனசில் வைத்துதான் அருண் ஒருவாரம் கழித்து கொலை செய்யும் வரை சென்றான்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பிறகு, சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். அதாவது, ஆடு, மாடு மேய்க்கும் பரிதாப பெண்களின் வாழ்க்கைக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.. நேற்றுகூட அப்படித்தான் ஒரு கொடூர சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.. பர்கூர் அடுத்த கனகமுட்டுலு அருகே தண்ணீர்பள்ளம் என்ற பகுதி உள்ளது.. வசித்து வந்த நபர் ராதா.. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரின் மனைவி பெயர் லட்சுமி.. 40 வயதாகிறது.. கடந்த 15 வருடங்களாகவே, ஆடுகளை வளர்த்து வருகின்றனர்...

மேய்ச்சல்

மேய்ச்சல்

ராதா, கூலி வேலைக்கு போய்விட்டால், லட்சுமிதான் அந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச்செல்வார்.. இவருடன் இதே பகுதியை சேர்ந்தவர் துரை என்பவரும் தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வாராம்.. அவருக்கு 50 வயதாகிறது.. வழக்கம்போல் நேற்று லட்சுமி ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார்.. பின்னாடியே துரையும் சென்றார்.. அங்குள்ள ஜி.டி. மலை பகுதியில் இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர்...

லட்சுமி

லட்சுமி

அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வந்தார்... அந்த காட்டில் இருந்து கிழங்குகளை சேகரித்து கொண்டு போக வந்திருப்பதாக அந்த இளைஞர் சொல்லவும், லட்சுமியும், துரையும் இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மதியம் சாப்பாட்டு நேரம் வந்தது.. இளைஞரை விட்டுவிட்டு சாப்பிட முடியாது என்பதால், லட்சுமி அந்த இளைஞருக்கும் சாப்பாடு வாங்கி தந்தார்.. 3 பேரும் சேர்ந்து சாப்பிட்டனர். பிறகு சாயங்காலம் நேரம் வந்துவிட்டதால், மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை ஒன்றாக சேர்த்து மறுபடியும் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் பணியில் லட்சுமியும் துரையும் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

 மேய்ச்சல்

மேய்ச்சல்

அப்போது துரையின் ஆடுகள் சிலவற்றை காணோம்.. அவைகள் அங்கிருந்து சற்று தூரமாக மேய்ச்சலுக்கு சென்றுவிட்டிருந்தன.. அதனால், அந்த ஆடுகளை அழைத்து வருவதற்காக துரை சென்றார்.. உடனே தனியாக இருந்த லட்சுமியிடம் திடீரென தன் வேலையை காட்டினார் இளைஞர்.. சில்மிஷத்தில் ஈடுபட்டார்.. பிறகு பலாத்காரமும் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அலறி கூச்சல் போட்டுள்ளார். ஆனாலும் லட்சுமி சத்தம் போட்டது யார் காதிலும் விழவில்லை..

 கிழங்கு கொடுவாள்

கிழங்கு கொடுவாள்

அந்த இளைஞர், லட்சுமியை பலாத்காரம் செய்துவிட்டு, பிறகு கிழங்கை அறுக்க கொண்டு வந்திருந்த கொடுவாளால், லட்சுமியின் தலையை ஒரே வெட்டாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.. இதனிடையே மேய்ச்சலில் இருந்து திரும்பிய துரை ஓடி வந்து பார்த்தபோது, லட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.. அவரது தலை துண்டிக்கப்பட்டிருந்தது..

 புல்லட் எங்கே?

புல்லட் எங்கே?

பிறகு, இது குறித்து கந்திக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றினர்.. போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்து, விசாரணையை ஆரம்பித்தனர்.. அந்த இளைஞர் பற்றி விசாரித்துள்ளனர்.. அவர் பெயர் சிம்மராஜ்.. 35 வயதாகிறது.. பர்கூர் நக்கல்பட்டியை சேர்ந்தவராம்.. இவருக்கு "புல்லட்" என்ற பட்டப்பெயர் உண்டாம்.. ஆனால், இப்போது புல்லட்டை காணவில்லையம்.. அவர் தலைமறைவாக இருப்பதால், தேடி வருகிறார்கள் போலீசார்..!

English summary
what happened to krishnagiri lakshmi and police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X