தண்ணீர் பிடித்த போது கிருஷ்ணகிரியில் மின்னல் பாய்ந்து இளம்பெண் பலி.. மற்றொரு பெண் காயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளியின் மனைவி பலியானார்.
Recommended Video
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. இடி மின்னலுடன் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து ஒரு பெண் இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் முன்றம்பட்டி அருகேயுள்ள கேத்துநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் மனைவி கவிதா (26).

இவரும் பக்கத்தில் வீட்டில் உள்ள சரவணன் மனைவி சசிகலாவும் (30) அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னமரத்தின் அருகே தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இருவர் மீது மின்னல் பாய்ந்தது.
இதில் கவிதா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உடனிருந்த சசிகலா ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி செய்யபட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications