காமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்
மகளாக பார்க்க வேண்டிய மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூர மாமனார்களின் செயல் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான மருமகள்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி: மகனுக்கு திருமணம் செய்து கொண்டு வரும் மருமகளை மகளாக பார்க்க வேண்டும். ஆனால் சில காம கொடூர மாமனார்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சலுக்க ஆளாக்கியுள்ளனர். கிருஷ்ணகிரியிலும், திருத்தணியிலும் இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மாமனாரைப் பற்றி அவரது அசிங்கத்தனமாக செயல்களைப் பற்றி மருமகள்கள் கூறியதை காது கொடுத்து கேட்டிருந்தால் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்காது.
சந்தியா அமைதியான அழகான பெண். கிருஷ்ணகிரியில் உள்ள அக்ரஹாரத்தில் வசிக்கும் கண்ணனுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணவாழ்க்கை மகிழ்ச்சியாக போனதால் அதன் அடையாளமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. மருமகள் சந்தியா மீது மாமனாருக்கு ஒரு கண் உண்டு. அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் சுத்தி சுத்தி வந்திருக்கிறான். தனிமையில் இருந்த போது செக்ஸ் தொல்லை கொடுத்தான்.

மருமகளின் மன உளைச்சல்
மாமனாரின் தொல்லை பற்றி மாமியாரிடம் புகார் கூறியும் பயனில்லை. உலகத்தில இல்லாத எதுவும் செய்யலையே இதெல்லாம் சகஜம்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ என்று மாமியார் கூறவே அதிர்ந்து போனாள் சந்தியா.

காவல்நிலையத்தில் புகார்
கிருஷ்ணகிரியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. காவல்துறையினரும் புகாரை அலட்சியப்படுத்தினர். மாமனாரின் தொல்லை மேலும் அதிகரிக்கவே மனமுடைந்து போனால் சந்தியா.

மாமனார் பலாத்காரம்
சந்தியா தனிமையில் இருந்த போது மாமனார் என்ற கயவன் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டான். அழுது கொண்டே பஞ்சாயத்தில் புகார் கூறியும் பயனில்லை. அம்மா வீட்டிற்கு போய் பெற்றோரிடம் கூறிவிட்டு விஷம் குடித்துவிட்டாள். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பயனில்லை. உயிர் போய்விட்டதாக மருத்துவர்கள் கூறவே பெற்றோர் கதறல் காண்பவர்களின் கண்களை குளமாக்கியது. மகளின் மரணத்திற்குக் காரணமாக மாமனார், மாமியார், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருத்தணி கொடூரம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் லாரி டிரைவராக வேலை செய்யும் முனி கிருஷ்ணனுக்கு பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த யுவராணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். அழகான யுவராணிக்கு திருமண வாழ்க்கை அமைதியாகவே போனது.

நைட் ஷிப்ட் வேலை
இரவு நேரங்களில் கணவன் முனி கிருஷ்ணன் வேலைக்கு சென்று விட மாமனார் டில்லிபாபு மருமகள் யுவராணியை காம எண்ணத்துடன் நெருங்கினார். அதற்கு யுவராணி இடம் தரவில்லை. தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் மாமனார். மாமனார் எல்லை மீறுவதை தனது கணவரிடம் புகார் சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லை.

கண்டு கொள்ளாத கணவன்
அப்பாவை துரத்திவிட வீண் பழி போடுவதாக யுவராணியை கண்டித்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டில்லிபாபு மருமகளை அதிகம் தொல்லை கொடுத்தார். எல்லை மீறவே, மனம் உடைந்த யுவராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமனாரைப் பற்றி தான் எவ்வளவோ கூறியும் எனது கணவர் நம்பவில்லை. தனது உயிர் போன பின்னராவது அவரது தந்தை குறித்து எனது கணவர் தெரிந்து கொள்ளட்டும் என்று உருக்கத்துடன் யுவராணி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து டில்லி பாபுவை கைது செய்தனர்.

அநியாயமாக போன 2 உயிர்கள்
காமம் இயல்பானதுதான். அதை எப்படி எங்கே பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. காம இச்சையை சிறுமிகள், மகள், மருமகள்கள் மீது பயன்படுத்தி படுபாதக செயல்களைச் செய்யும் இது போன்ற கொடூர குணம் கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாகும்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications