ஐக்யூ மட்டுமே 146.. அசத்திய இந்திய வம்சாவளி பெண் டாக்டர்.. 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்றார்
லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணான டாக்டர். பாஷா முகர்ஜி, 'மிஸ் இங்கிலாந்து' பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
இந்தியாவில் பிறந்தவர் பாஷா முகர்ஜி. அவருக்கு 9 வயதாக இருக்கும்போதே, இங்கிலாந்துக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்துவிட்டார். இப்போது இங்கிலாந்தின் டெர்பி பகுதியில் வசித்து வரும், பாஷா முகர்ஜி. நாட்டிங்காம் பல்கலைக் கழகத்தில், மருத்துவ அறிவியல் பட்டம் படித்துள்ளார்.

இதுதவிர, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் ஒரு பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில்தான், மிஸ் இங்கிலாந்து போட்டியில் பாஷா முகர்ஜி பங்கேற்றார்.
ஐந்து மொழிகளில் பேசும் திறன் பெற்றுள்ளார் பாஷா முகர்ஜி. எனவே போட்டியில் கலக்கிவிட்டார் கலக்கி. பாஷா முகர்ஜிக்கு ஐக்யூ அளவு 146 என்ற அளவில் உள்ளது தெரியவந்தது. எனவே பொது அறிவு கேள்விகளுக்கு புகுந்து விளையாடி பதில் அளித்தார்.
பல சுற்று போட்டிகளுக்கு பிறகு, மிஸ் இங்கிலாந்து பட்டத்தையைும் வென்று அசத்தியுள்ளார். ஆனால் அதிகம் கொண்டாடி நேரத்தை வீணாக்கவில்லை. மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற, சிறிது நேரத்திற்கு பின், பாஸ்டனில் உள்ள மருத்துவமனையில் டாக்டர் பணியை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
நான் மருத்துவப் பள்ளியில் படிக்கும் போது எனது அழகிப் போட்டி வாழ்க்கை தொடங்கியது. இதைச் செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது, படிப்பிலிருந்து ஒரு வித்தியாசமான முயற்சியாகவும் இதை நான் பார்த்தேன் என்றார் பாஷா முகர்ஜி.
மிஸ் இங்கிலாந்தாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், பாஷா முகர்ஜி உலக அழகி போட்டியில் நுழையும் அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மேலும் மொரீஷியஸுக்கு விடுமுறையை கொண்டாட அவர் அனுப்பி வைக்கப்படுவார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications