Lassa Fever: ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சா பிரச்னை இல்லை.. முற்றிவிட்டால் மரணம் நிச்சயம்! ஹூ வார்னிங்
லண்டன்: பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் 3 பேரின் உயிரை பறித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நைஜீரியாவிலிருந்து பரவி வருகிறது.
கொரோனா பரவல் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. கொரோனாவின் உருமாற்றங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது ஓமிக்ரான் நாடு முழுவதும் பரவி வருகிறது. இது டெல்டாவை விட வேகமாக பரவினாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் லஸ்ஸா என்ற காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது..

உயிரிழப்பு
இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி பிரிட்டனில் 3 பேர் லஸ்ஸா காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். 1980 களில் இருந்து லஸ்ஸா காய்ச்சலின் பாதிப்புகள் பிரிட்டனில் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் லஸ்ஸா காய்ச்சலால் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு 2 பேர் பாதிக்கப்பட்டனர்.

நைஜீரியா
நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தகவலின்படி கடந்த 1969 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் லஸ்ஸாவின்தான் இந்த காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. லஸ்ஸா காய்ச்சல் என்பது ஒரு ரத்தக் கசிவு காய்ச்சலாகும். இது விலங்குகளால் பரவும் கடுமையான வைரஸ் நோயாகும்.

உலக சுகாதார அமைப்பு
இது அரேனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி மாஸ்டோமிஸ் எலிகளின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது வீட்டுப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த லஸ்ஸா மனிதர்களுக்கு பரவுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் போதிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இது பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

21 நாட்கள்
இந்த நோய் பாதித்தால் அதன் தாக்கம் 2 முதல் 21 நாட்கள் வரை இருக்கும். இதன் அறிகுறிகள் மிகவும் லேசானவை மற்றும் கண்டறிய முடியாதவை. இது காய்ச்சல் மற்றும் உடல்சோர்வை கொடுக்கும். நோய்த் தொற்று அதிகரிக்கும் போது பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல் மற்றும் வயிற்றுவலி உள்ளிட்டவை ஏற்படும் என ஹூ கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
மேலும் நோயின் தீவிரம் ஏற்பட்டால் முகத்தில் வீக்கம், நுரையீரல் குழியில் திரவம் சேருதல், வாய், மூக்கு, யோனி உள்ளிட்டவற்றில் ரத்தப்போக்கு ஏற்படும். இவ்வாறு ஏற்படும் அறிகுறிகளுக்கு பின்னர் அந்த நபர் இரு வாரங்களுக்குள் மரணமடையலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன
லஸ்ஸா காய்ச்சலை கண்டறிவது கடினம். எபோலா, மலேரியா, டைஃபாய்டு, மஞ்சள் காய்ச்சல் போல் ரத்தக்கசிவு காய்ச்சலிலிருந்து லஸ்ஸா காய்ச்சலை வேறுபடுத்துவது மிகவும் கடினம் என்கிறார் நிபுணர்கள். இதற்கு Ribavirin மருந்து கொடுக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. இது நோயின் ஆரம்பக்கட்டத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications