நபிகள் நாயகத்தின் மரபு.. இஸ்மாயிலி முஸ்லிம்களின் மதகுரு! மறைந்த ஆகா கானின் சிறப்புகள் தெரியுமா?
லண்டன்: நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவர் என்று இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4வது ஆகா கான் பிரின்ஸ் கரிம் அல்-ஹுசைனி இன்று காலமானார். தனது 20 வயதிலேயே கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தலைவராக மாறிய இவர் யார்? இதோ முழு விவரம்..
ஷியா இஸ்லாத்தின் ஒரு பிரிவுதான் இஸ்மாயிலி முஸ்லிம் சமூகம். இதன் தலைவரான்தான் ஆகா கான் என்று அழைப்பார்கள். 19ம் நூற்றாண்டில் பாரசீக பேரரசர் ஒருவரால் இஸ்மாயிலி முஸ்லிம் சமூக தலைவர் 'ஆகா கான்' என அழைக்கப்பாடுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்று காலமான கரிம் அல்-ஹுசைனி, 4வது ஆகா கான் ஆவார். கடந்த 1957ம் ஆண்டு இவர் ஆகா கான் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது இவருக்கு வயது வெறும் 20 தான். ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டிருந்தார்.

மத தலைவராக இருந்தாலும் மதநம்பிக்கை, கல்வி, மருத்துவம் மற்றம் வளர்ச்சி திட்டங்களை இவர் செயல்படுத்தி வந்திருக்கிறார். ஆகா கான் பெயரில் வளர்ச்சிக்கான நெட்வொர்க் (Aga Khan Development Network-AKDN), ஒன்று செயல்பட்டு வருகிறது. இது பல்வேறு நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய தனியார் வளர்ச்சி நெட்வொர்க்குகளில் இதுவும் ஒன்று.
ஆகா கான்கள் இஸ்லாத்தை உருவாக்கிய முகமது நபிகளின் நேரடி வழி வந்தவர்களாக அறியப்படுகிறார்கள். அந்த வகையில் 4வது ஆகா கான் ஆகிய பிரின்ஸ் கரிம் அல்-ஹுசைனியும் இவ்வாறே கருதப்பட்டார்.
முழு பெயர்: பிரின்ஸ் ஷா கரீம் அல்-ஹுசைனி
பதவி: நிஜாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் இமாம். 4வது ஆகா கான்
பிறப்பு: டிசம்பர் 13, 1936, ஜெனீவா, சுவிட்சர்லாந்து
இறப்பு: பிப்.05 2025 (வயது 88)
குடியுரிமை: பிரிட்டன்
குடும்பம்: இளவரசர் அலி கான் மற்றும் இளவரசி தாஜ்-உத்-தவ்லா ஆகியோரின் மகன். சுல்தான் முகமது ஷாவின் பேரன். இவர் 3வது ஆகா கானாக இருந்தார்.
பொறுப்பு: சுல்தான் முகமது ஷா கடந்த 1957ம் ஆண்டு காலமானபோது, 20வது வயதில் 4வது ஆகா கானாக பொறுப்பேற்றுக்கொண்டார். சுல்தான் முகமது ஷாவுக்கு மருமகனாக அலி கான் இருந்தாலும், அவரை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் நவீன காலத்தை சேர்ந்த கல்வியறிவு அதிகம் பெற்றவரால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதால் பேரன் ஷா கரீம் அல்-ஹுசைனியை 4வது ஆகா கானாக தேர்ந்தெடுத்தார்.
கல்வி: லு ரோஸியில் (சுவிட்சர்லாந்து) படித்தார், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (1959) இஸ்லாமிய வரலாற்றில் பட்டம் பெற்றார் .
பங்களிப்பு: ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்மாயிலி முஸ்லிம்களை வழிநடத்தினார். மேலே குறிப்பிட்ட AKDN நெட்வொர்க்கை நிறுவியது இவர்தான். இதன் மூலம் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு போன்றவற்றிக்கு தொடர்ந்து நிதி அளித்து வந்திருக்கிறார். ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளை கட்டியிருக்கிறார்.
மிக குறிப்பாக நவீன கல்வி மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக்காக இவர் வாதிட்டிருக்கிறார்.
வாரிசு: இவரது வாரிசு யார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரது உயில் வாசிக்கப்படும் போது தான் அது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications