இனி செல்பியும் இல்லை.. ஷெல் ஃபிஷ்ஷும் இல்லை.. மன்னர் சார்லஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 விதிகள்!
லண்டன்: மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட நிலையில் அவர் இதன் பிறகு 5 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமாம்.
ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம ஆட்சி செய்தார். 96 வயதான ராணி தனது உடல்நல பாதிப்பால் ஸ்காட்லாந்தில் அரண்மனையில் தங்கியிருந்த போது காலமானார்.
ராணியின் மறைவால் பிரிட்டன் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். இவரது முடிசூட்டு விழா நேற்றைய தினம் லண்டனில் நடந்தது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தங்க ரதத்தில் சார்லஸும் அவருடைய மனைவி கமீலாவும் வெஸ்ட் மின்ஸ்டர் அபேவுக்கு சென்றனர். அங்கு 700 ஆண்டு கால பழமையான இருக்கையில் நின்று கொண்டு மன்னராக சார்லஸ் பதவியேற்கிறார் என்பதை அங்கீகரித்து பிஷப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அங்கிருப்போர் God save the King என அனைவரும் முழங்குவர். பின்னர் அரசர் அந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.

இதையடுத்து அவருடைய ஆடைகள் களையப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக தங்க இழைகளால் ஆன திரை மூலம் மறைக்கப்பட்டது. பின்னர் மன்னரின் தலை, உடல் பகுதியில் ஹோலி கிறிஸம் எண்ணெய் , புனித எண்ணெய் தேய்த்துவிடுவிட்டனர். மன்னர் முடிசூட்டும் நிகழ்ச்சி அனைத்தும் டிவியில் ஒளிபரப்பாகும் நிலையில் இந்த நிகழ்வு மட்டுமே டிவியில் ஒளிப்பரப்பாகாது.
இதையடுத்து இவரை போல் கமீலாவுக்கும் சில சடங்குகள் செய்யப்பட்டு அவர்கள் தலையில் கிரீடங்கள் வைக்கப்பட்டன. இனி மன்னர் சில விதிகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதாவது ஆட்டோகிராப்புகள் முதல் செல்பிகள் வரை எடுப்பதில் கட்டுப்பாடுகள் உண்டு. 5 விதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதல் விதி: மன்னர் பரிசு பொருட்களை ஏற்கக் கூடாது- அரசு குடும்ப பாரம்பரியபடி மன்னர்கள் இனி தாங்கள் செல்லும் நாடுகளிலும் நிகழ்ச்சிகளிலும் கொடுக்கப்படும் பரிசு பொருட்களை ஏற்க கூடாது.
இரண்டாம் விதி: இளவரசர் வில்லியமுடன் மன்னர் சார்லஸ் ஒன்றாக பயணிக்கக் கூடாது- அரசராக பதவியேற்ற சார்லஸ், ஒரே விமானத்தில் இளவரசர் வில்லியமுடன் பயணிக்க கூடாது, அரசு குடும்பத்தின் பாரம்பரியபடி., இவரும் தனித்தனி விமானங்களில் பயணிக்க வேண்டும். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் இருவரது உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது.

மூன்றாவது விதி: உடையில் கட்டுப்பாடுகள்- வெளிநாடுகளுக்கு செல்லும் போது அரசர் சில ஆடை கட்டுப்பாட்டுகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அந்த நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.
நான்காவது விதி: மக்களுடன் செல்பியும் ஆட்டோகிராபும் கிடையாது- மக்களுடன் மன்னர் செல்பி எடுக்கக் கூடாது. அது போல் அவர்களுக்கு ஆட்டோகிராபும் போட்டுத் தர கூடாது. இந்த விதிகளானது அரசு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
ஐந்தாவது விதி- மட்டி மீன்களை உண்ணக் கூடாது- உணவு நச்சுத்தன்மையை தவிர்ப்பதற்காக மட்டி மீன்களை (shell fishes) அரசர் உட்கொள்ளக் கூடாது. அது போல் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர் அந்நியர்களிடம் இருந்து எந்த உணவையும் வாங்கி சாப்பிட கூடாது.
இந்த 5 விதிகளையும் மன்னர் சார்லஸ் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications