லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விலகாத அந்த மர்மம்.. ஆற்றில் கிடந்த பழைய மனித எலும்பு.. எடுத்து பார்த்தா 5000 வருஷம் பழசு.. ஆனால்..!

Google Oneindia Tamil News

லண்டன்: ஆற்றில் கிடந்த எலும்பு ஒன்றை எடுத்து சோதனை செய்து பார்த்ததில் அது 5000 வருட பழைய எலும்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடந்த சம்பவம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இடையே முக்கியமான குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தேம்ஸ் ஆற்றில் இந்த எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சிமோன் ஹண்ட் என்ற நபர் ஆற்றில் கருப்பு நிறத்தில் எதோ ஒன்று மிதப்பதை பார்த்து உள்ளார்.

மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை; 3 படகுகள் சிறைபிடிப்புமீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை; 3 படகுகள் சிறைபிடிப்பு

இதையடுத்து அருகே சென்று சோதனை செய்தவர் அது மனித எலும்பு என்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த எலும்பு முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் காணப்பட்டது.

மனித எலும்பு

மனித எலும்பு

இதையடுத்து அதை அங்கேயே கழுவி வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். வீட்டிற்கு கொண்டு சென்று அதை புத்தகம் வைக்கும் ரேக்கில் வைத்தவருக்கு சில நிமிடங்களில் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது ஒருவேளை கொலை செய்யப்பட்டவருடைய எலும்பாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. இதையடுத்து உடனடியாக போலீசுக்கு சிமோன் ஹண்ட் தகவல் கொடுத்தார்.

 போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதையடுத்து அங்கே வந்த போலீசார் சிமோன் ஹண்டிடம் எலும்பை வாங்கிக்கொண்டு நேரடியாக எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆற்று பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்த அதிகாரிகளுக்கு வேறு எலும்போ அல்லது உடல் பாகமோ கிடைக்கவில்லை. இதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு மிகவும் பழையதாக இருந்ததால் அதை ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து சோதனை செய்ய சொல்லி உள்ளனர்.

5000 ஆண்டுகள் பழமை

5000 ஆண்டுகள் பழமை

இந்த சோதனை முடிவுகள்தான் அங்கு போலீசாரையும், ஆராய்ச்சியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கார்பன் டேட்டிங் சோதனையில் அந்த எலும்பு 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். ஆம் அதாவது கற்காலத்தின் கடைசி கட்டத்தை சேர்ந்தவரின் எலும்பு இது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3516 - 3365 இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது இந்த எலும்பு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 மம்மி

மம்மி

அதாவது பல எகிப்து மம்மிகளை விட இந்த ஒற்றை எலும்பு அதிக வயது கொண்டது. இது மேல் தொடை எலும்பு ஆகும். ஆனால் இது ஆணுடையதா, பெண்ணுடையதா என்று கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. இந்த எலும்பை கொண்ட நபர் 170 செமீ உயரம் கொண்டவராக இருக்கலாம் என்று ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் மியூசியத்தில் இந்த எலும்பை பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.

தேம்ஸ் நதி

தேம்ஸ் நதி

தேம்ஸ் நதி மிகவும் பழமையானது. வரலாற்று ரீதியாக பல ஆயிரம் வருடங்களாக இந்த நதி உள்ளது. வரலாற்று ரீதியாக பல பழமையான பொருட்கள் இந்த ஆற்றில் இதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆராய்ச்சியாளர்களை குழப்பிய விஷயம் என்றால் இந்த எலும்பு எப்படி இத்தனை வருடங்களாக பாதிப்பு அடையாமல் இருந்தது என்பதுதான்.

பதப்படுத்தவில்லை

பதப்படுத்தவில்லை

எலும்பை முறையாக பதப்படுத்தவில்லை என்றால் அது கண்டிப்பாக இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பின் சேதம் அடைந்தது இருக்கும். ஆனால் இந்த எலும்பு கொஞ்சம் கூட சேதம் அடையவில்லை. புது எலும்பு போல உறுதியாக இருந்துள்ளது. இந்த மர்மத்திற்குதான் விடை கிடைக்கவில்லை. பெரும்பாலும் களிமண் போன்ற அமைப்பில் இந்த எலும்பு சிக்கி இத்தனை வருடம் பாதுகாப்பாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

English summary
5000 years old human bone without any damages found in London Thames River.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X