ச்சே என்ன மனுஷன்யா! செல்ல நாயின் உயிரை காப்பாற்ற.. வீட்டையே விற்க முடிவெடுத்த நபர்.. நெகிழ்ச்சி

ஹைபோவோலெமிக் என்பது திரவ இழப்பு பாதிப்பாகும். உடலில் உள்ள உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட போதுமான அளவு திரவம் இருக்க வேண்டும். இந்த திரவம் உடலிலிருந்து கட்டுக்கடங்காமல் வெளியேறும் பிரச்னைதான் ஹைபோவோலெமிக் என்று சொல்லப்படுக

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், நோய்வாய்ப்பட்ட தனது நாயை காப்பாற்ற சிகிச்சை செலவுகளுக்காக தன்னுடைய வீட்டையும் விற்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் இட்டுள்ள பதிவு நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜாக்சன். இவர் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நாய் வளர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்ட ஜாக்சன் தன்னுடைய வீட்டில் வீமரனர் (Weimaraner) வகையை சேர்ந்த ராம்போ, ராக்கி எனும் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். தனிமையில் வசித்துவரும் ஜாக்சனுக்கு இந்த இரண்டு நாய்கள்தான் நண்பர்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ராம்போவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

எந்த உணவையும் ராம்பே எடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே சாப்பிட்டது முழுவதும் வாந்தி எடுத்துள்ளது. அடுத்த நாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் ராம்போவுக்கு குடல் அழற்சி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது ராம்போ 2 வயதை பூர்த்தி செய்திருக்கிறது. இது போன்று பாதிப்பு இருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் உடல்நிலை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாதிப்பு

பாதிப்பு

ராம்போ இப்போது மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. குடல் அழற்சியால் உணவு உட்கொள்ள முடியவில்லை. மட்டுமல்லாது 'ஹைபோவோலெமிக்' எனும் பாதிப்பையும் ராம்போ எதிர்கொண்டிருக்கிறது. ஹைபோவோலெமிக் என்பது திரவ இழப்பு பாதிப்பாகும். உடலில் உள்ள உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட போதுமான அளவு திரவம் இருக்க வேண்டும். இந்த திரவம் உடலிலிருந்து கட்டுக்கடங்காமல் வெளியேறும் பிரச்னைதான் ஹைபோவோலெமிக் என்று சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பால் ராம்போவின் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதனை சரி செய்ய மூக்கு வழியாக பைப் செலுத்தி அதன் மூலம் செயற்கை திரவம் உட்செலுத்தப்பட்டு வருகிறது. எல்லாம் ஒரளவு சீராக சென்றுக்கொண்டிருந்தது. ராம்போ நீண்ட நேரத்திற்கு பின்னர் மயக்கம் தெளிந்து கண் முழித்திருக்கிறது. இந்த தருணத்திற்ககாக காத்திருந்த ஜாக்சன் இப்போதுதான் ஆறுதல் பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் ராம்போவின் உடல்நிலை பழைய மாதிரி மோசமடைய தொடங்கியுள்ளது. என்ன செய்து பார்த்தும் ராம்போ கண் திறக்கவில்லை. பின்னர் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்ததில் ராம்போவின் குடலின் ஒரு பகுதி அழுகி இருப்பது தெரிய வந்தது. எனவே இதற்கான அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

ரூ.1 கோடி

ரூ.1 கோடி

ராம்போவின் இன்சூரன்ஸ் பணம் ரூ.6.4 லட்சம் முழுவதுமாக முந்தைய சிகிச்சைக்காவே காலியாகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கும் அதற்கு தேவையான மருந்துக்கும் பணம் தற்போது தேவை, மட்டுமல்லாது ராம்போ 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். இவையனைத்திற்கும் சேர்த்து ரூ.1.1 கோடி வரை பில் வந்துள்ளது. பில்லை கட்ட போதுமான பணம் ஜாக்சனிடம் இல்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. உலகமே தன்னை விட்டு பிரிந்து செல்வதை போல உணர்ந்துள்ளார் ஜாக்சன். தன்னுடைய நிலை குறித்து விரிவாக சமூக வலைத்தளத்தில் எழுதி மருத்துவ பில்லையும் அதில் இணைத்திருக்கிறார்.

வீடு

வீடு

இந்த அவல நிலையை பார்த்த சிலர் இவருக்கு உதவி செய்துள்ளனர். இப்படியாக ரூ.6.5 லட்சம் வரை நிதி சேர்ந்துள்ளது. இருப்பினும் இது போதாது என்பதால் தன்னுடைய வீட்டை விற்க அவர் முன்வந்திருக்கிறார். தற்போது வரை காரிலேயே தங்கி வருகிறார். இதுவரை சேமித்த தொகையை சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்ததையடுத்து ராம்போவின் உடல்நிலை சீராகி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இது நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+