புண்படுத்திட்டான்! என் வயசை எப்படி கேட்கலாம்!நேர்காணலில் சீறிய பெண்! கடைசியில் செய்த சம்பவம் இருக்கே
லண்டன்: நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட ஒரே ஒரு சிம்பிள் கேள்வி கடை உரிமையாளருக்குப் பெருத்த நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.
Recommended Video
பொதுவாக எந்தவொரு நேர்காணல் என்றாலும் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அப்படித்தான் அயர்லாந்திலும் நேர்காணலில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டது.
இருப்பினும், இதில் டென்ஷன் ஆன நேர்காணலில் கலந்து கொண்ட பெண் ஒருவர், அடுத்துச் செய்த செயல் தான் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

வடக்கு அயர்லாந்து
வடக்கு அயர்லாந்தில் இயங்கி வரும் டோமினோஸ் பீட்சா கடையில் டெலிவரி டிரைவர் வேலை நிரப்ப நேர்காணல் நடைபெற்றது. அதில் ஜானிஸ் வால்ஷ் என்ற பெண் கலந்து கொண்டார். நேர்காணல் சமயத்தில் அவரது வயது உரிமையாளர் குறித்துக் கேட்டுள்ளார். இந்நிலையில், வயது காரணமாகத் தனது விண்ணப்பத்தில் பாரபட்சம் காட்டுவதாக ஜானிஸ் வால்ஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கான இழப்பீடும் அவர் வாங்கி உள்ளார்.

ஒரு கேள்வி
இது தொடர்பாக வால்ஷ் மேலும் கூறுகையில், "எனது நேர்காணலின் போது, முதலில் எனது வயதைப் பற்றித்தான் கேட்டார்கள். நேர்காணலை நான் சிறப்பாகவே செய்தேன். இருப்பினும், எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். நேர்காணல் வயது குறித்து அவர் கேள்வி எழுப்பியது நினைவுக்கு வந்தது. வயது காரணமாகவே எனக்கு வேலையைக் கொடுக்காமல் நிராகரித்து உள்ளனர்" என்றார்.

மன்னிப்பு
மேலும், இது தொடர்பாக அந்த கடைக்கு வால்ஷ் மெயிலும் அனுப்பி உள்ளார். உடனடியாக கடையில் இருந்து அவருக்குக் கால் வந்துள்ளது. நேர்காணல் குறித்து வருத்தம் தெரிவித்த அவர்கள், இதுபோன்ற கேள்விகள் பொருத்தமற்றது என்றும் இந்தக் கேள்விகள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்து உள்ளனர். இத்துடன் அவர் அந்த பிரச்சினையை விட்டுவிட்டார்.

பாரபட்சம்
இருப்பினும், கொஞ்சக் காலம் கழித்து அவர் வேறு சில டோமினோஸ் ஊழியர்கள் உடன் பேசி உள்ளார். அப்போது தான் 18-30 வயதுடையவர்களுக்கு மட்டுமே இந்த வேலை கிடைப்பது தெரிய வந்துள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக நேர்காணல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பின்னரும் டிரைவர் தேவை என்ற விளம்பரம் தொடர்ந்து உள்ளது. மேலும், தான் பெண் என்பதற்காகவும் வேலை மறுக்கப்பட்டதாக வால்ஷ் புகார் தெரிவித்துள்ளார்,

உத்தரவு
இது தொடர்பாக அவர் வடக்கு அயர்லாந்து சமத்துவ ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கை விசாரித்த ஆணையம் நாட்டில் தொழில் செய்யும் அனைத்து நிறுவனங்களும் சமத்துவ சட்ட திட்டங்களைத் தெளிவாகத் தெரிந்து இருக்க வேண்டும் என்றும் நேர்காணல்களில் முறையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு 4,250 பவுண்ட், (இந்திய மதிப்பில் ரூ 3.7 லட்சம்) நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications