14ஆம் நூற்றாண்டு சிம்மாசனம், 360 ஆண்டு பழைய கிரீடம்.. சார்லஸ் முடிசூட்டு விழாவில் என்ன நடக்கும்
லண்டன்: பிரிட்டன் மன்னராக இன்று சார்லஸ் பதவியேற்கும் நிலையில், இந்த நிகழ்வில் என்ன நடக்கும் என்பதை எளிமையாகப் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் நீண்ட காலம் முடியாட்சியில் தலைமை பொறுப்பில் இருந்தவர் ராணி எலிசபெத். இவர் கடந்தாண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மகன் சார்லஸ் மன்னர் பதவிக்கு வந்தார்.

அரச பணிகளை அவரே கவனித்து வந்த போதிலும், அவருக்கு முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இதனிடையே இன்று கோலாகலமாக அவரது முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக ஒட்டுமொத்த பிரிட்டனும் விழாக் கோலத்துடன் தயாராகி வருகிறது.
முதல்முறை: 70 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த முடிசூட்டு விழா நடைபெறுகிறது. மூன்றாம் சார்லஸ் இன்று மன்னராக முடிசூட்டப்படுவார். இந்த விழாவில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் இருந்தும் பல முக்கிய தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
1937ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் நாட்டின் முதல் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்கிறார். கடந்த செப்டம்பரில் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணமடைந்த நிலையில், அதன் பிறகு சார்லஸ் மன்னராவதை உறுதிப்படுத்தும் நிகழ்வு இதுவாகும்.
பிரிட்டனில் இப்போது கடும் பொருளாதார நெருக்கடி நிகழும் நிலையில், இந்த முடிசூட்டு விழா சிம்பிளாக நடைபெறுகிறது. சிம்பிள் என்றாலும் கூட இதில் உலகெங்கும் இருந்து 2,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக 1953இல் நடந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் எளிமையான மற்றொரு விழாவில் கமிலா ராணியாக முடிசூட்டப்படுவார். சார்லஸ் மற்றும் மனைவி கமிலா என இருவரும டயமண்ட் ஜூபிலி ஸ்டேட் கோச்சில் அபேக்கு செல்வார்கள்... அவர்கள் ஆறு வின்ட்சர் கிரே குதிரைகளால் மெய்க்காவலரான ஹவுஸ்ஹோல்ட் கேவல்ரியினில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சார்லஸ்: அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 14 ஆம் நூற்றாண்டின் சிம்மாசனத்தில் அமரப் போகிறார். அவரது தலையில் 360 ஆண்டுகள் பழமையான செயின்ட் எட்வர்ட் கிரீடம் அணிவிக்கப்பட உள்ளது. அதிக வயதில் மன்னரானவர் என்ற பெயரையும் சார்லஸ் பெறுகிறார்.
இந்த நிகழ்வு கிறிஸ்துவ முறையில் நடைபெற உள்ளது. இருப்பினும், முதல்முறையாக இந்த முடிசூட்டு விழாவில் மாற்று மதத்தைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு சார்லஸை வாழ்த்த உள்ளனர்.
பிரிட்டனின் பிரதமரும், இந்து மதத்தைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், இப்போது பிரிட்டன் பிரதமராக இருக்கும் நிலையில், அவர் இங்கிலாந்து அரசின் தலைவராகப் பைபிளைப் படித்து சாதனை படைக்கப் போகிறார்.
எளிய நிகழ்வு: இந்த நிகழ்வு 1953இல் ராணி எலிசபெத்துக்காக நடத்தப்பட்டதை விட சிம்பிளாக இருக்கும். இருந்த போதிலும், கண்கவர் நிகழ்ச்சிகள், மிகப் பெரிய அணிவகுப்புகள் இதில் நடைபெற உள்ளது.
இளவரசர்கள் ஹாரி மற்றும் ஆண்ட்ரூ இருவரும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வார்கள். இருப்பினும், அவர்கள் அரச சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். புதிதாக முடிசூட்டப்பட்ட மன்னர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லும் போது, நடக்கும் அரச குடும்பத்தினரின் ஊர்வலத்திலும் இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
சார்லஸ் கமிலா கோல்ட் ஸ்டேட் கோச்சில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலத்துடன் திரும்புவார்கள். அவர்களுடன் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4,000 பிரிட்டிஷ் பேர் கலந்து கொள்வார்கள்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்பிய பிறகு, தம்பதியரும் மற்ற பிரிட்டிஷ் அரச குடும்பத்தாரும் பால்கனியில் இருந்து அனைவரையும் வாழ்த்துவார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications