பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்.. யார் இந்த ஆனந்த் குமார் சுந்தர்?
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். அவர் போட்டியிடும் தொகுதி என்ன, அங்கு எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்..
உலகையே ஆண்ட பிரிட்டன் நாட்டின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அங்கு ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. பிரதமராக ரிஷி சுனக் இருக்கிறார். இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது..

இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆனால், பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் கடந்த சில மாதம் முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பிரிட்டனில் பிரிட்டனை பொறுத்தவரை மிக முக்கிய மற்றும் பெரிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் இருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் இருக்கிறார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெல்லுமா அல்லது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெல்லுமா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேநேரம் எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பிரிட்டனில் பின்பற்றப்படுவது வழக்கம். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம்.
இதில் பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்ல மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.. ஜூன் 7ம் தேதி வெளியான இறுதி பட்டியலின்படி விவரங்களை பார்ப்போம்.

ஸ்டீபன் டிம்ஸ் (தொழிலாளர் கட்சி)
மரியா ஹிக்சன் (கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி)
ஹிலாரி விக்டோரியா பிரிஃபா (லிபரல் டெமாக்ரட்டீஸ் கட்சி)
தாஹிர் மிர்சா (சுயேச்சை)
டேனியல் சார்லஸ் ஆக்ஸ்லி (சீர்திருத்த யுகே)
ரோஸி பியர்ஸ் (பசுமைக் கட்சி)
சதீஷ் மோகன் ராமதாஸ் (சுயேச்சை)
ஆனந்த் குமார் சுந்தர் (சுயேச்சை)
பிரிட்டனில் அனைத்து வேட்பாளர்களும் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications