உலகத் தமிழர்களுக்கு வணக்கம்.. இங்கிலாந்து பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து!
லண்டன்: வணக்கம் என்று சொல்லி உலகத் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி அத்தனை தமிழ் நெஞ்சங்களையும் குளிர வைத்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இன்று உலகம் முழுவதும் தமிழர் திருநாளான அறுவடைத் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியிலும் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம். நம்முடைய அருமையான இங்கிலாந்து வாழ் தமிழ்ச் சமுதாயத்தினருக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் நான் எனது தை பொங்கல் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் இணைந்து நீங்கள் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறிறீர்கள். உங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இது மிகவும் சிறந் தருணம் என கருதுகிறேன்.
சுவையான சர்க்கரைப் பொங்கலை சுவைப்பது மட்டுமல்லாமல், பாரம்பரியமான இந்த நாள் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு தமிழ்ச் சமுதாயம் பெரும் பங்காற்றியுள்ளது. கட்டுமானத் தொழில் முதல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது வரை தமிழ்ச் சமுதாயத்தின் பங்கு மிகப் பெரியது. பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், நோயாளிகளை குணமாக்கும் டாக்டர்களாகவும் தமிழர்கள் பங்காற்றஉகிறார்கள்.
I want to wish Tamils in the UK and around the world a happy Thai Pongal. pic.twitter.com/GCROsgqI9d
— Boris Johnson (@BorisJohnson) January 13, 2021
கொரோனோ போராட்டத்தில் முன்களப் பணியாளர்களாக தமிழ் டாக்டர்களின் செயல்பாடுகளும் பெரிதும் பாராட்டுக்குரியவை. உங்களது பங்களிப்புகள் மிகவும் அருமையானவை, மிகவும் முக்கிமயானவை. உங்களது மிகப் பெரிய பங்களிப்புடன் இந்த பூமியில் அனைவரும் வாழ ஆசைப்படும் இடமாக இங்கிலாந்தை உயர்த்துவற்தற்கு நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
அருமையான மண்பானைப் பொங்கலுடன் இந்த நன்னாளை கொண்டாடி மகிழவும், வளமும் நலமும் பெறவும் தமிழர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications