லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அல்லாடும் இந்தியா.. 'கை'க் கொடுக்கும் இங்கிலாந்து - நல்ல மனசுக்கு நல்லா இருக்கணும்

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனாவால் இந்தியா அவதிப்படுவதைப் பார்த்து, இங்கிலாந்து உதவ முன்வந்துள்ளது.

கோவிட்-19 இரண்டாம் அலை இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிதீவிரமாக வீசி வருகிறது. மே மாதம் உச்சம் தொடும் என்று கூறப்படுகிறது.

Boris Johnson Offers Ventilators to India Covid-19 Crisis

ஆக்சிஜன் பற்றாக்குறை ஒருபக்கம், ரெமிடிசிவிர் மருந்து பற்றாக்குறை ஒருபக்கம் என மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கியுள்ளனர். பிணங்களை எரிக்கும் வாடை நாசியைக் அறுக்கிறது.

இந்த நிலையில், இந்தியா படும் வேதனையைப் பார்த்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வென்டிலேட்டர்கள் அல்லது கொரோனா சிகிச்சையில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

"இந்திய மக்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்," என்று பிரிட்டிஷ் ஊடகங்களிடம் தெரிவித்த ஜான்சன், இந்தியா ஒரு மிகச் சிறந்த நட்பு நாடு என்றும், வென்டிலேட்டர்கள் அல்லது சிகிச்சை முறைகளை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

முழு லாக்டவுன்: இன்று இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை என்னென்ன கட்டுப்பாடுகள் - எவை இயங்கும்முழு லாக்டவுன்: இன்று இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை என்னென்ன கட்டுப்பாடுகள் - எவை இயங்கும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சன், கடந்த ஏப்ரல் 26ம் தேதி வரவிருந்த தனது இந்திய பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதற்கு பதிலாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அவர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

English summary
Boris Johnson Offers Ventilators to India Covid-19 - கொரோனா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X