புயல் வரப்போகிறது.. கவனமாக இருங்கள்.. ஓமிக்ரான் குறித்து "ஹூ" கொடுக்கும் முக்கிய வார்னிங்!
லண்டன்: ஓமிக்ரான் பரவல் காரணமாக ஐரோப்பா கண்டத்தை நோக்கி புதிய புயல் ஒன்று வந்து கொண்டு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் பரவல் ஐரோப்பாவில் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில்தான் அதிக அளவில் பரவி உள்ளது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் 11,542,143 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 90,743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 147,433 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 172 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,873,098 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,521,612 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

உலக சுகாதார மையம்
இந்த நிலையில்தான், ஓமிக்ரான் பரவல் காரணமாக திடீரென உலகம் முழுக்க கேஸ்கள் அதிகரிக்கும். முக்கியமாக ஐரோப்பா கண்டத்தில் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகும் என்று உலக சுகாதார மையத்தின் ஐரோப்பா மண்டல இயக்குனர் ஹான்ஸ் குல்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், உலகம் முழுக்க எதிர்பார்க்காத வகையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

கேஸ்கள் உயர்கிறது
குறிப்பிடத்தகுந்த அளவில் திடீரென கேஸ்கள் உயர்ந்து இருக்கிறது. முக்கியமாக ஐரோப்பாவில் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஓமிக்ரான் கொரோனா பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக மாறிவிட்டது. இன்னும் சில வாரங்கள்தான். அதன்பின் இன்னும் பல நாடுகளில் ஓமிக்ரான் பரவும்.

ஆதிக்கம்
இன்னும் பல நாடுகளில் ஓமிக்ரான் ஆதிக்கம் செலுத்தும். உலக நாடுகளின் மருத்துவ சிஸ்டத்தை ஓமிக்ரான் இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்லும். புயல் ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின் கணக்குப்படி ஐரோப்பா கண்டத்தில் 53 நாடுகள் உள்ளன. இதில் 38 நாடுகளில் ஓமிக்ரான் உள்ளது.
Recommended Video

புயல் வருகிறது
இங்கெல்லாம் கடந்த வாரம் மட்டும் 27000 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 2.6 மில்லியன் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இவை எல்லாம் ஓமிக்ரான் இல்லை என்றாலும் புதிய கேஸ்கள் 40 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் திடீரென அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது என்று ஐரோப்பா மண்டல இயக்குனர் ஹான்ஸ் குல்ஜ் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications