கோவாக்சினுக்கு பிரிட்டிஷ் அரசு அனுமதி.. நவம்பர் 22ல் இருந்து பயண கட்டுப்பாடுகளில் தளர்வு
லண்டன்: இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சினுக்கு பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கி உள்ளது. அனுமதிக்கப்பட்ட வேக்சின்கள் பட்டியலில் கோவாக்சினை பிரிட்டிஷ் அரசு சேர்த்துள்ளது.
உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கு பயண அனுமதி அளிக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே கோவாக்சின் போட்டுக்கொண்ட நபர்களுக்கு நேற்றில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் மூலம் அனுமதிக்கப்பட்ட அனைத்து வேக்சின்களுக்கும் அமெரிக்கா பயண கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தி உள்ளது. இதனால் கோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களும் அமெரிக்கா செல்ல முடியும்.

ஆஸ்திரேலியா
இதையடுத்து சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவிலும் இதே அனுமதி அளிக்கப்பட்டது. கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்போது யுகேவிலும் இதே தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உலக சுகாதார மையம்
சமீபத்தில் கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்தது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கோவாக்சினுக்கு அவசர அனுமதி அளித்தது. அனைத்து டேட்டாக்களும் வழங்கப்பட்ட காரணத்தால் கோவக்சினுக்கு அவசர அனுமதி அளித்து உலக சுகாதார மையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அனுமதியை தொடர்ந்து யு.கேவும் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

அனுமதி
அதன்படி கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகள் யுகேவிற்கு எந்த தடையும் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும். இவர்கள் யு.கேவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த தளர்வு நவம்பர் 22ல் இருந்து அமலுக்கு வருகிறது. இதற்கு முன் யுகே செல்லும் கோவாக்சின் போட்டுக்கொண்ட மக்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கட்டாய விதி இருந்தது.

கோவிஷீல்ட்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்னொரு வேக்சினான கோவிஷீல்ட் வேக்சினுக்கும் ஏற்கனவே யுகே அனுமதி வழங்கி உள்ளது. இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் அல்லது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின் போட்ட இந்தியர்கள் இனி யு.கேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று யுனைட்டட் கிங்டம் தெரிவித்துள்ளது. தற்போது கோவாக்சின் போட்டவர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications