லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் முதல் கொரோனா தடுப்பூசி மருந்து பெற்ற இந்திய வம்சாவளி முதியவர்! சொன்ன வார்த்தை!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள நியூகேஸில் உள்ள மருத்துவமனையில் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியை பெற்றார் 87 வயது முதியவர். இவர் தான் கொரோனாவிற்கு எதிராக இங்கிலாந்தில் தடுப்பூசி பெற்ற முதல் நபர் என்று சொல்கிறார்கள். ​​ ஹரி சுக்லா என்ற அந்த முதியவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

கொடிய வைரஸால் அதிக ஆபத்துகளை சந்தித்து வருபவர்கள் முதியவர்கள் தான். அந்த வகையில் இங்கிலாந்தில் முதற்கட்டமாக வயதானவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது ஃபைசர் / பயோஎன்டெக்கின் தடுப்பூசி விநியோகிக்கப்படுகிறது. இதற்காக தடுப்பூசி நாள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார நிறுவனம் முதல் கொரோனா தடுப்பூசியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரி சுக்லா (87 வயது) என்பவருக்கு வழங்கியது. இவர் தான் உலகில் அதிகாரப்பூர்வமாக முதல் கொரோனா தடுப்பூசி பெற்ற நபராக கருதப்படுகிறார்.

கொரோனா தடுப்பூசி.. விரைவில் மத்திய அரசுடன் சீரம் ஒப்பந்தம்.. விலை என்ன தெரியுமா? அதிகம் இல்லை பாஸ் கொரோனா தடுப்பூசி.. விரைவில் மத்திய அரசுடன் சீரம் ஒப்பந்தம்.. விலை என்ன தெரியுமா? அதிகம் இல்லை பாஸ்

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

டைன் அண்ட் வேரைச் (Tyne and Wear) சேர்ந்த ஹரி சுக்லாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. மிகப்பெரிய முன்னேற்ற நடவடிக்கை முன்னெடுத்த பிரதமர் போரிஸ் ஜான்சனை சுக்லா வெகுவாக பாராட்டினார். "இந்த தொற்றுநோயின் முடிவை நோக்கி நாங்கள் வருகிறோம் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், தடுப்பூசி போடுவதன் மூலம் என் உடல் நலம் முன்னேற்றம் அடைவதில் மகிழ்ச்சியடைகிறேன். கொரோனா தடுப்பூசி பெற்றதை என் கடமை என்று நான் உணர்கிறேன், என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்" என்றார்.

பிரதமர் நன்றி

பிரதமர் நன்றி

இதற்கிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், இன்றைய நாள் கொரோனா வைரஸுக்கு எதிரான இங்கிலாந்தின் போராட்டத்தின் முக்கிய படியைக் குறிக்கிறது. தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள், சோதனைகளில் பங்கேற்ற பொது உறுப்பினர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்காக உழைத்த இங்கிலாந்து சுகாதார துறைக்கும் நன்றி என்றார்.

லாக்டவுன் விதிகள்

லாக்டவுன் விதிகள்

தடுப்பூசி வழங்கப்பட்ட போதிலும். பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க சில காலங்கள் ஆகும் என்று எச்சரித்த இங்கிலாந்து பிரதமர், எச்சரிக்கையுடன் , விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களை வலியுறுத்தினார், மேலும் குளிர்காலம் முடியும் வரை லாக்டவுன் விதிகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றார்.

விரைவில் அதிகரிப்பு

விரைவில் அதிகரிப்பு

இங்கிலாந்தில் 50 மருத்துவமனை மையங்களில் முதற்கட்டமாக இங்கிலாந்தில் தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது. வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அதிகரிக்கப்பட உள்ளது. பெல்ஜியத்தில் உள்ள ஃபைசரின் உற்பத்தித் தளத்திலிருந்து முதல் மருந்து அளவுகள் வந்தபின்னர் இந்த திட்டம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

English summary
An 87-year-old Indian-origin man from the north east of England will become one of the first people in the world to get a vaccine against COVID-19 when he receives his Pfizer/BioNTech jab at a hospital in Newcastle on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X