தவழ்ந்து வந்த ‘திருட்டு’ பூனை.. வேடிக்கை பார்த்த நிஜ பூனை.. சிசிடிவி காட்சியால் மாட்டிய திருடன்!
பூனை போல் தவழ்ந்து சென்று நிஜப் பூனையிடம் மாட்டிக்கொண்ட திருடனின் வீடியோ வைரலாகியுள்ளது.
லண்டன்: பூனை போல் தவழ்ந்து சென்று நிஜப் பூனையிடம் மாட்டிக்கொண்ட திருடனின் வீடியோ சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம்ஷைர் பகுதி காவல்துறையினர் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஒரு வீட்டின் முன் வாசலில் திருடன் ஒருவன் பூனை போல் மெதுவாக தவழ்ந்து வருகிறான். ஆனால் அவன் சற்றும் எதிர்பாராமல், அந்த வீட்டின் கண்ணாடி கதவுக்கு உள்ளே நிஜப் பூனை ஒன்று உட்கார்ந்திருக்கிறது. நிஜ பூனையும், பூனை திருடனும் நேருக்கு நேர் சந்தித்து கொள்கின்றனர்.

"நிஜ பூனையுடன் நேருக்கு நேர் கேமராவில் சிக்கிய பூனை கொள்ளையன்", என கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த பூனை திருடனின் பெயர் மார்க் லாசன். 42 வயதாகும் மார்க் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த சூழலில் தான் பூனை போல் தவழ்ந்து சென்று நிஜப் பூனையை நேருக்கு நேர் சந்தித்து சிசிடிவி கேமராவில் சிக்கியிருக்கிறான் மார்க். வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மார்க்கை கைது செய்துள்ளனர்.
மார்க் மாட்டிக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளதன் மூலம் வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்துவதன் அவசியத்தையும் நாட்டிங்ஹாம்ஷைர் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பூனை திருடனின் களவாணி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications