ஓஓ-வென டிக் டாக்கில் பாடல்.. திடீரென மேற்கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த தாய்.. இளம்பெண் அதிர்ச்சி!
ஒரு பெண் தனது செல்போனில் பாடல் பாடி வீடியா எடுத்த போது, அவரது தாய் மேற்கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: ஒரு பெண் தனது செல்போனில் டிக் டாக்கில் பாடல் பாடி வீடியா பதிவு செய்து கொண்டிருந்த போது, அவரது தாய் மேற்கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுவிட்டாலும், உலகின் பல நாடுகளில் இன்னமும் அது பயன்பாட்டில் தான் இருக்கிறது. எனவே டிக் டாக் அடிமைகள் பலர் இன்னமும் வீடியோ எடுத்து பதிவிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ள ஒரு டிக் டாக் வீடியோவில், லிஸ் ஜான் மிலன் என்ற இளம் பெண் தான் பாடல் பாடுவதை வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு பின்னால் ஒரு பயங்கர சத்தம் கேட்கிறது. திரும்பி பார்க்கும் போது, அவரது தாய் வீட்டின் மேற்கூரையை பிய்த்துக்கொண்டு விழுகிறார்.

வைரல் வீடியோ
நல்லவேளையாக அவர் கீழே விழாமல் அந்தரத்தில் தொங்குகிறார். இதைப் பார்த்து பயந்து போன லிசா, ‘ஓ மை காட்' என தன் தாயை நோக்கி ஓடுகிறார். சுமார் 10 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காலில் எலும்பு முறிவு
இந்த சம்பவம் குறித்து லிசா வெளியிட்டுள்ள பதிவில், ‘தனது தாய் சூட்கேஸ்களை எடுப்பதற்காக அறையின் மேல் பகுதிக்கு சென்றதாகவும், அப்போது இந்த விபத்து நடந்ததாகவும்' குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் அவரது தாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.

ஷாக் ஆன நெட்டிசன்கள்
இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போலவே, ‘2020ல் இது போல் எதுவும் நடக்கலாம்' என்ற ரேஞ்சுக்கு கமெண்ட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் ஜாலியாகவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

வலியை மறந்து சிரிப்பு
லிசா வெளியிட்ட இந்த வீடியோவை 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சுமார் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அப்போதைக்கு விழுந்த அதிர்ச்சியில் இருந்தாலும், பிறகு வீடியோவிற்கு வரும் கமெண்ட்டுகளைப் பார்த்து ரசித்து, சிரித்து வருகிறாராம் லிசாவின் தாயார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications