5 வயது முதலே ராணி எலிசபெத் விரும்பி சாப்பிடும் உணவு இதுதான்.. சீக்ரெட்டை சொன்ன அரண்மனை செஃப்
லண்டன்: தனது 5 ஆவது வயது முதல் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் விரும்பி சாப்பிட்ட உணவு என்ன என்பது குறித்து பிரபல செஃப் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையல் கோடைக்காக ஸ்காட்லாந்து சென்ற போது அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து அவருக்கு அரண்மனையின பிரதான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.
எனினும் ராணி சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். இதையடுத்து ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு 10 நாட்கள் கழித்து அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும்.

ராணி
ராணி காலமான நிலையில் அவரது அரண்மனை வாயில் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராணி எலிசபெத் குறித்த பிரத்யேக தகவல்களை உலக மக்கள் கூகுளில் தேடி வருகிறார்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

15 ஆண்டுகள்
அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளாக ராணி எலிசபெத்திற்கு தனிப்பட்ட சமையலராக மெக் கிராடி இருந்தார். இவரே இளவரசி டயானா, இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்டோருக்கும் சமையலராக இருந்தார். ராணி எலிசபெத்தின் உணவு பழக்கவழக்கம் என்ன என்பதுகுறித்து அவர் யூடியூபில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பிரட்டில் ஜாம்
அதில் ராணி, வெறும் பிரட்டில் கொஞ்சம் ஜாமும் , பட்டரும் தடவிய சாண்ட்விச்சைதான் குயின் எலிசபெத் பல ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தார். இதை ராணி தனது மதிய உணவிற்கு பிறகு டீ டைம் ஸ்னாக்காக சாப்பிட்டு வந்தார். அவர் சாப்பிட்ட ஜாம் ஸ்காட்லாந்த் தோட்டத்தில் விளைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது.

வெள்ளரி
இதை தவிர அவருக்கு வெள்ளரி, மின்ட் கிரீம் சீஸ் மற்றும் தக்காளி, சீஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் அவரது ஆல்டைம் ஃபேரவைட் என்றால் அது பிரட் ஜாம் தான் என தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரே உணவை சாப்பிட்டால் போரடிக்கும். இதனால் வித்தியாசமான உணவுகளை சுவைக்கவே பெரும்பாலானோர் விரும்புவர்.

15 நாடுகளுக்கு ராணி
ஆனால் 15 நாடுகளுக்கு ராணியாக இருந்த எலிசபெத் மிகவும் சிம்பிளான பிரட்டையே அருந்தினார் என்ற தகவல் மூலம் ராணி எத்தனை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பது தெரிகிறது. இரு கொஞ்சூண்டு பணம் வந்துவிட்டாலே தலை கால் புரியாமல் ஆடும் சிலர் மத்தியில் ராணி என்றுமே ராணி என்பதை நிரூபித்துவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications