இங்கிலாந்தின் நர்ஸ் லூசி லெட்பி!! ஓவராக பால் தந்து குழந்தைகளை தூக்கி.. சப்போர்ட்டுக்கு வந்த 200 பேர்
லண்டன்: லண்டன் மருத்துவமனைகளில் நர்ஸ் லூசி லெட்பி என்ற பெயரை கேட்டாலே அலறிவிடுகிறார்கள்.. இளம் நர்ஸூக்கு எப்படி இந்த அளவுக்கு குரூர மனம் இருக்கும்? என்று நீதிபதிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நர்ஸ்க்கு ஆயுள் தண்டனை தந்தும்கூட, இந்த வழக்கில் திடீர் திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது இங்கிலாந்தில்?
கடந்த 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள கவுண்டெஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தவர் இந்த லூசி லெட்பி . 33 வயதாகிறது.. இவர் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்கும் பணியை செய்து வந்தார். ஆனால், குழந்தை பிறந்ததுமே அவைகளை கொலை செய்ய விநோதமான திட்டங்களை தீட்டி அவைகளை அரங்கேற்றியும் உள்ளார்..

ஓவராக பால் கொடுத்து
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஓவராக பால் கொடுத்து திணறடித்து கொலை செய்திருக்கிறார். அதேபோல அந்த குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி போட்டு கொன்றிருக்கிறார்.. மேலும், மருந்து இல்லாமல் ஊசியை மட்டுமே அதாவது வெறும் காற்றை மட்டுமே குழந்தையின் உடலில் செலுத்தி கொன்றிருக்கிறார். இப்படி மொத்தம் 7 பிஞ்சு குழந்தைகளை கொன்றுள்ளார் நர்ஸ் லூசி லெட்பி...
இவர் பணிபுரிந்த வார்டில் மட்டும் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வந்ததால், கடந்த 2016ல் லூசி லெட்பி துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. ஆனால், இன்னொரு பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முயன்றபோதுதான் கையும் களவுமாக சிக்கி கைதானார்..
நர்ஸ் லூசி 3 முறை கைது
இதே குற்றத்துக்காக 3 முறை கைது செய்யப்பட்டார். எனினும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.. இதற்கு பிறகு லூசிக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டதையடுத்து, லூசி லெட்பி கைது செய்யப்பட்டார்...
இதையடுத்து, அவரது வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டு, மருத்துவ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தன்னுடைய டைரியில், "நான் ஒரு பேய், நானே கொலை செய்தேன். நான் மிகவும் மோசமானவள்" என்றெல்லாம் எழுதி வைத்திருந்தாராம்.
இதையடுத்து மான்செஸ்டர் க்ரவுன் கோர்ட்டில் வழக்கு நடந்தது.. இரட்டை குழந்தைகள் மற்றும் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளை டார்கெட் செய்து தன்னுடைய கொடூர எண்ணத்தை நர்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் நர்ஸ் லூசி லெட்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.. இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலையை எழுப்பியது.. இதனை அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே வரவேற்றார்கள்..
திருமணமான ஆண் டாக்டர்
இப்படியெல்லாம் லூசி குழந்தைகளை கொலை செய்ய காரணம், திருமணமான ஆண் டாக்டர் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தானாம்.. அதுமட்டுமல்ல, மருத்துவமனையில் சக ஊழியர்கள், சாகசக்காரர் என்று பாராட்ட வேண்டும் என்று லூசி நினைத்தாராம்..
தற்போது கொலைகள் நடந்த மருத்துவமனையின் தோல்விகளை ஆராய, தனியாக ஒரு பொது விசாரணையும் நடந்து வருகிறது. நர்ஸ் லூசியின் வழக்கறிஞர் குழு, சில இறப்புகள் இயற்கையான காரணங்களால் அல்லது மோசமான சிகிச்சையால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறி, புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும், இதனடிப்படையில் இந்த வழக்கு "குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையத்தின்" பரிசீலனையில் உள்ளது.
குழந்தை கொலையாளி
இந்நிலையில், தொடர் குழந்தைக் கொலையாளி எனத் தண்டிக்கப்பட்ட நர்ஸ் லூசி லெட்பியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சக நர்ஸுகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
லூசி லெட்பிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பற்றது. அது தங்களுக்குப் பெரும் கவலையை அளிப்பதாக கூறி, சுமார் 200 நர்ஸ்கள், இந்த வழக்கில் சுயாதீன மறுஆய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மருத்துவர்கள், ஆலோசகர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவின் அங்கமாக இவர்கள் உள்ளனர்.
நர்ஸூக்கு 200 பேர் ஆதரவு
இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "இந்த தீர்ப்பு மறுக்க முடியாத ஆதாரங்களை விட, சூழ்நிலை சாட்சியங்களையும், சர்ச்சைக்குரிய மருத்துவ கருத்துக்களையுமே பெரிதும் நம்புகிறது. மருத்துவமனையின் அமைப்பு ரீதியான குளறுபடிகளே குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம்" என்கிறார்கள்.
ஆனால், லூசியின் மீதான குற்றச்சாட்டு, விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நேர்மையாக நிரூபிக்கப்பட்டதாக போலீசாரும், அரசு வழக்கறிஞர் சேவையும் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் தண்டனை பெற்ற நர்சுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் 200 நர்சுகள் போர்க்கொடி தூக்கியிருப்பது, குழந்தைகள் கொலை வழக்கில் திடீர் திருப்பத்தை உண்டுபண்ணி வருகிறது.











Click it and Unblock the Notifications