Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டனில் வெடித்து சிதறிய 2 ஆம் உலகப்போர் வெடிகுண்டு.. வெளியான பரபரப்பு காட்சிகள்..என்ன நடந்தது?

இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று இங்கிலாந்தில் வெடித்து சிதறியது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 90 மைல் தொலைவில் இருக்கும் நார்போக் என்ற நகரத்தில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு செயல் இழக்கவைக்கும் போது வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் ஜெர்மனி மீது குண்டுகளை வீசின.

பதிலுக்கு ஜெர்மனியும் எதிரி நாடுகள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இப்படி வீசப்பட்ட குண்டுகள் பலவும் வெடிக்காத நிலையில், தற்போது வரை உலகம் முழுவதும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

2-ம் உலகப்போர் வெடிகுண்டு

2-ம் உலகப்போர் வெடிகுண்டு

வெடிகுண்டுகள் கிடப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக வந்து வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் அதைக் கைப்பற்றி செயல் இழக்கசெய்து வரும் செய்திகளை நாம் அடிக்கடி கேள்விபட்டு இருக்கிறோம். மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் கூட சில சமயங்களில் இத்தகைய வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதுண்டு. எனினும், எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி இந்த வெடிகுண்டுகள் அகற்றப்படுகின்றன். அந்த வகையில், அண்மையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 94 மைல் தொலைவில் இருக்கும் நார்போக் என்ற நகரத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கிடப்பது கண்டறியப்பட்டது.

செயல் இழக்க வைக்கும் பணியில்

செயல் இழக்க வைக்கும் பணியில்


கிரேட் யார்மவுத் என்ற பகுதியில் வெடிகுண்டுகள் கிடந்ததை ராணுவத்தின் கருவி கண்டுபிடித்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் பணியில் இந்தப் பணிக்காக பயன்படுத்தப்படும் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.

 வெடித்து சிதறிய வெடிகுண்டு

வெடித்து சிதறிய வெடிகுண்டு

ஆனாலும் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் தீப்பிழம்புகளின் வெடித்து சிதறிய வெடிகுண்டால் அப்பகுதி ஒரு நிமிடம் அதிர்ந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிகுண்டு வெடித்ததும் அப்பகுதி சில நிமிடங்கள் புகை மண்டலம் ஆனது போல காட்சி அளித்தது. வெடிகுண்டு வெடித்த காட்சிகளை நார்போக் நகர காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை

யாருக்கும் காயம் ஏற்படவில்லை

இது தொடர்பாக இங்கிலந்து பாதுகாப்பு படை கூறும் போது, "வெடிகுண்டை மெதுவாக செயல் இழக்க வைக்கும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. எனினும் எந்த வித உயிர்சேதமோ, யாருக்கும் காயமோ எற்படவில்லை. இருந்தாலும் வெடி குண்டு வெடித்ததால் அங்கு ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். மிகவும் கவனமாகவே கையாளப்பட்ட போதும் இந்த வெடிகுண்டு வெடிக்கும் ரிஸ்க் கொண்டதுதான். ஆற்றங்கரையோரம் இந்த வெடி குண்டு வெடித்தது. இதனால், அங்குள்ள சுவரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பிடும் பணி நடக்க உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+