Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முதலுறவு".. கன்னித்தன்மையை "அந்தம்மா" கிட்ட இழந்துட்டேன்.. பரம ரகசியத்தை போட்டுடைத்த பிரின்ஸ் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையில் எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ராஜ பரம்பரையே என்றாலும், நாட்டை ஆளும் மன்னர் குடும்பமே என்றாலும், அடிதடி பஞ்சாயத்தெல்லாம் இருக்கும் போல.. அப்படித்தான் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸ் - டயானா தம்பதிக்கு பிறந்த 2வது மகன் இளவரசர் ஹாரி... இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடிகையான மேகன் மார்கெலை காதலித்து வந்தார்.

கடந்த 2018ல் 2 பேருமே திருமணம் செய்து கொண்டனர்.. ஆனால், அரச குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. அதாவது, நிறம் சார்ந்தும் பல்வேறு விமர்சனங்களை மேகன் எதிர்கொண்டார்.

 கசப்புகள்

கசப்புகள்

கடைசியில் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இதற்கு பிறகு, தங்களது காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்து ஹாரி - மேகன் தம்பதி அளித்த பல்வேறு பேட்டிகள், இங்கிலாந்து அரச குடும்பத்தில் பல்வேறு சர்சசைகளை தொடர்ந்து ஏற்படுத்தியது. மேகன் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என்றெல்லாம் அரச குடும்பத்தினர் ரொம்பவே கவலைப்பட்டார்கள்.. பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசியதாக, அந்த தம்பதியினர் ஓபனாக சொல்லியிருந்தது, பேசுபொருளாக உருவெடுத்தது.

கசப்பு

கசப்பு

இப்படிப்பட்ட சூழலில், இளவரசர் ஹாரி ஸ்பேர் (spare) என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார்... அந்த புத்தகம் இன்றுதான் அதாவது 10ம் தேதி வெளியிடப்படுகிறது.. ஆனால், இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருசில விஷயங்கள் முன்கூட்டியே கசிந்துவிட்டன.. அதுகுறித்த செய்திகளும், கடந்த 10 நாட்களாகவே மீடியாக்களில் பரபரப்பாக வெளியாகி வந்தன.. குறிப்பாக வில்லியம் தன்னை தாக்கிவிட்டதாக, ஹாரி அதில் பதிவிட்டிருந்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. "கடந்த 2019ம் ஆண்டு மேகன் மார்கெல் பற்றி, லண்டன் வீட்டில் எனக்கும், என் சகோதரர் வில்லியமுக்கும் தகராறு வந்துவிட்டது..

முதுகில் காயம்

முதுகில் காயம்

அப்போது வில்லியம், மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர். ஒரு கட்டத்தில் வில்லியம், என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்தார்... என்னுடைய கழுத்தில் கிடந்த சங்கிலியை பிய்த்து எறிந்தார்.. என்னையும் கீழே தரையில் தள்ளிவிட்டார். நான் தடுமாறி நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்துவிட்டேன்.. அந்த கிண்ணம் உடைந்து, என்னுடைய முதுகில் காயத்தை ஏற்படுத்திவிட்டது.. நான் ஒரு நிமிஷம் அப்படியே படுத்துவிட்டு, அதற்கு பிறகுதான், கொஞ்சம் தெளிந்து, மெதுவாக எழுந்து வந்தேன்.. கீழே விழுந்துவிட்டதால், என்னுடைய முதுகில் காயம் ஏற்பட்டது.. இவை எல்லாம் மிக வேக வேகமாக நடந்து முடிந்துவிட்டன என்றெல்லாம் புத்தகத்தில் எழுதியுள்ளார்..

கன்னித்தன்மை

கன்னித்தன்மை

இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திவந்த நிலையில், இப்போது இன்னொரு செய்தியும் வெளிவந்துள்ளது. தாலிபான்களை தான் மனிதர்களாக பார்க்கவில்லை என்றும், அகற்றப்பட வேண்டிய சதுரங்க காய்களாக அவர்களை தான் கருதியதாகவும் ஹாரி தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.. அதுமட்டுமல்ல, 17 வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்துவிட்டதாக ஹாரி அதில் வெளிப்படையாகவே எழுதியுள்ளாராம்.. கொகைன் போதை பொருளை பலமுறை எடுத்துக் கொண்டது உள்ளிட்ட தகவல்களையும் தன்னுடைய சுயசரிதையில் ஹாரி பகிர்ந்து கொண்டுள்ளராம். இதைதவிர, பரம ரகசியம் ஒன்றையும் போட்டு உடைத்துள்ளார்..

உடலுறவு

உடலுறவு

அதில், "அன்றைய தினம் எனக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.. நான் அப்போது விஸ்கி குடித்திருந்தேன்.. பிறகு ஒரு பப்புக்கு போயிருந்தேன்.. ஆனால் அங்கே குடிக்கவில்லை... அங்கு ஒரு பெண் என்னையே உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். அவரை நான் அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன்... பப்புக்கு பின்னாடியே ஒரு புல்வெளி இருக்கிறது. அந்த புல்வெளியில் நாங்கள் உடலுறவில் ஈடுபட்டோம்" என்று ஓபனாகவே கூறியுள்ளார்.. இப்போது என்ன ஒரு சிக்கல் என்றால், 18 வயதுக்கு குறைந்த நபர்களோடு உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.. அதேபோல, 18 வயதுக்கு குறைந்த நபர்கள் குடிக்கவும் கூடாது... ஆனால், ஹாரி எல்லா வேலைகளையும் 17 வயதிலேயே பார்த்துள்ளார்..

 பரம ரகசியம்

பரம ரகசியம்

இதனால், பிரிட்டன் சட்ட திட்டங்களையும் அவர் மீறியுள்ளதாகவே தெரிகிறது.. ஹாரி இப்படி ஒரு ரகசியத்தை சொன்னதுமே, மீடியாக்கள் பரபரப்பாகிவிட்டன.. ஹாரியுடன் அன்று உறவில் இருந்த பெண்ணின் போட்டோவையும் எப்படியோ மோப்பம் பிடித்து கண்டுபிடித்துவிட்டார்கள்.. அது இப்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.. ஆனால் அந்தப் பெண், ஹாரி தன்னை முத்தமிட்டார், வேறு எதுவும் நடக்கவில்லை என்கிறாராம்.. இந்த விஷயம் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.. ராஜகுடும்பத்தில் இது மிகப்பெரிய அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது.. இந்த சுயசரிதை வெளியீட்டுக்கு பிறகு, இன்னும் எத்தனை பூதம் கிளம்ப போகிறதோ?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+