இங்கிலாந்து ஜெயிலில் பெண் அதிகாரியின் தகாத உறவு.. காதலில் விழுந்த கைதி.. அதுக்கு இப்படியா நடக்கணும்
லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் நடந்த ஒரு சம்பவம்தான், இன்று சோஷியல் மீடியாவின் கவனத்தை பெற்று வருகிறது.. அதிலும் 26 வயது பெண் இந்த அளவுக்கு கிரிமினல் வேலைகளை செய்வாரா? என்று இந்த பெண்ணை பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது.. யாரிந்த இளம்பெண்? என்ன நடந்தது லண்டனில்? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
லண்டன் அருகில் உள்ளது வெதர்பி என்ற நகர்.. இங்குள்ள ஒரு ஜெயிலில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த ஜெயிலில் ஆபீஸராக வேலை பார்த்தவர்தான் 26 வயதான மேகன் கிப்சன்.. இவர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரயன் ஹோரன் என்ற கைதியுடன் சற்று நெருக்கமாகவே பழகி வந்திருக்கிறார்.. இதை ஜெயிலில் பலரும் பார்த்திருக்கிறார்கள்..
இதையடுத்து, சக ஊழியர்கள் , மேகன் கிப்சன் மீது தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்... அதாவது இந்த 5 மாசத்தில் மட்டும் 102 புகார்கள் தரப்பட்டுள்ளதாம்..
ஜெயிலில் பெண் அதிகாரி
வேலை நேரத்தின்போது, கைதிகளின் ரூமுக்குள் அதிக நேரம் இருப்பது, கைதியிடம் இப்படி தகாத உறவில் இருந்தபோது, இந்த பெண் அதிகாரியை யாராலும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது, போன்றவை அனைத்தும் அந்தப் புகார்களில் முக்கியமாக சொல்லப்பட்டிருந்ததாம்.
இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்... அப்போதுதான், பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்தன.
அதாவது, மேகன் கிப்சன், அந்த கைதியுடன் தகாத உறவில் மட்டுமல்ல, அந்த கைதிக்கு ரகசியமாக கஞ்சா வேப் போன்ற போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததும் உறுதியாகியது... அதுமட்டுமல்ல, போனில் ரொம்ப நேரம் பேசுவதும், ஆபாசமான மெசேஜ்களை கைதிக்கு அனுப்பியும் வந்துள்ளார்..
கைதியுடன் தகாத உறவு
இப்படி 900-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்கள் இருவரும் அனுப்பி கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.. ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைகளை பெற்றுக் கொண்டு, அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் இருவரும் பேசிக் கொண்டார்களாம்.
மேலும் மேகன் கிப்சன், அந்த கைதியின் அம்மாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.. ஷெஃபீல்டு நகருக்கு சென்று கைதியின் அம்மாவை நேரிலும் சந்தித்துள்ளார்.. அப்போது தன் மகனுக்கு போதைப்பொருள், பணம் தருவது என கைதியின் அம்மாவும் உதவி செய்தாராம்.
ரொமான்ஸ் கடிதங்கள்
இதையடுத்து மேகன் கிப்சனின் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.. அப்போது £1,000 ரொக்கத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.. டாட்டூ போடுவதற்காக இந்த பணத்தை வைத்திருந்தாராம்.. ஆனால், அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்ததற்கான எந்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
பிறகு கைதி எழுதிய ஆபாசமான காதல் கடிதங்களும் இந்த பெண் அதிகாரியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன... அந்த கடிதங்களை ரொமான்ஸ் வார்த்தைகளுடன் கைதி எழுதியிருந்தாராம்.. மேலும், மேகன் கிப்சன் ஜெயில் யூனிஃபார்முடன் காரில் உட்கார்ந்து கஞ்சா புகைத்த ஆதாரங்களையும் போலீசார் அவரது வீட்டிலிருந்து எடுத்துள்ளனர்..
அதிரடி தண்டனை
அனைத்து ஆதாரங்களையும் லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அது தொடர்பான விசாரணையும் நடந்து வந்தது. இறுதியில் இந்த வழக்கில் தற்போது கோர்ட் தண்டனை தந்துள்ளது..
அதில், அரசு வேலையில் இருந்து கொண்டு, இப்படி நடந்துகொண்டது மிக கடுமையான குற்றம்.. எனவே மேகன் கிப்சனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுகிறது" என்ற தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஹைலைட் என்னவென்றால் எந்த ஜெயிலில் அதிகாரியாக இந்த பெண் வலம் வந்தாரோ, அதே ஜெயிலில் கைதியாக இப்போது அடைக்கப்பட்டு விட்டார் மேகன் கிப்சன்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications