முதல் குழந்தை பிறந்து.. வெறும் 22 நாட்களில் பிறந்த 2வது குழந்தை.. "எப்புட்றா" குழம்பிய மருத்துவர்கள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு முதல் குழந்தை பிறந்து வெறும் 22 நாட்களில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இது அங்கே மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டன் நாட்டில் ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கே பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்து வெறும் 22 நாட்களில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

How a woman give birth to children in 22 days apart

பிரசவ வலி: அங்கே பெண் ஒருவருக்கு முதலில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு வெறும் 22 நாட்களில் அந்த பெண்ணுக்கு மீண்டும் பிசரவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அருகே இருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதையடுத்து உடனடியாக அந்த பெண்ணுடன் அவரது குடும்பத்தினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கே அந்த பெண்ணுக்கு மீண்டும் ஒரு அழகிய குழந்தை பிறந்துள்ளது. அங்கே இருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எப்படி வெறும் 22 நாட்களில் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் மிகப் பெரிய குழப்பத்தில் இருந்துள்ளனர். அதன் பின்னரே மருத்துவர்கள் இதை விளக்கி உள்ளனர். அதாவது அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கிறது. பொதுவாக இரட்டை குழந்தை என்றால் சில நிமிட இடைவேளையில் பிறக்கும். ஆனால், இந்த பெண்ணுக்கு 22 நாட்கள் இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதை மருத்துவர்கள் மிக மிக அரிய நிகழ்வு எனக் குறிப்பிடுகிறார்கள்.

குழந்தை: இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்து உள்ளது. கெய்லி டாய்ல் என்ற அந்த பெண் இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்தார். அவரது உடல்நிலையில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. அப்போது அவருக்கு பிசரவ வலி ஏற்படவே இரட்டை குழந்தை பிறக்கும் என்ற உற்சாகத்தில் அவர் இருந்துள்ளார். அதன்படி அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும், அந்த குழந்தை பிறக்கும் போதே உயிரிழந்துள்ளது.

அதிர்ச்சி தரும் இன்னொரு செய்தி என்னவென்றால் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்த உடன் பிரசவம் நின்றுவிட்டது. மருத்துவர்கள் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்துள்ளனர். இருப்பினும், இரண்டாவது குழந்தைக்கான அறிகுறி தெரியவில்லை. இதனால் அந்த பெண்ணை வீட்டிற்கே மருத்துவர்கள் அனுப்பிவிட்டனர். இந்தச் சூழலில் தான் சுமார் 22 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிசரவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிசேரியன் மூலம் இரண்டாவது குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இந்த குழந்தை நலமாக இருந்துள்ளது.

உலகில் முதல்முறை: சுமார் 3 வாரங்கள் இடைவெளியில் இப்படி இரட்டை குழந்தை பிறந்துள்ளது மருத்துவர்களையே திகைப்படைய வைத்துள்ளது. இவ்வளவு நாட்கள் இடைவெளியில் வேறு யாருக்கும் இரட்டை குழந்தை பிறந்ததாகத் தெரியவில்லை, இரண்டாவது குழந்தை நல்லபடியாக பிறந்தாலும் முதல் குழந்தை இறந்ததால் அந்த பெண் சோகத்தில் இருக்கிறாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு இரட்டை குழந்தைகள் தான் பிறக்கும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் எல்லா பொருட்களையும் இரண்டு இரண்டாக வாங்கினோம். ஆனால் முதல் குழந்தையே இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது மருத்துவர்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. நான் சோகமாகவே வீட்டில் இருந்தேன். இந்த இடைப்பட்ட நாட்கள் ரொம்பவே கடினமாக இருந்தது. தினசரி பரிசோதனை செய்தோம்.

அப்போது தான் 3 வாரம் கழித்து எனக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையும் பிறந்தது. 22 நாட்கள் இடைவெளியில் வேறு யாருக்கும் இதுவரை குழந்தை பிறந்தது இல்லையாம். மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர்" என்றார். இந்தச் சம்பவம் 2021இல் நடந்துள்ளது. இது குறித்து அந்த பெண்ணிடம் நேர்காணல் எடுத்து அந்நாட்டு ஊடகம் விரிவான செய்தியை இப்போது வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+