2005ம் ஆண்டு லாட்டரியில் 20 கோடி வென்ற லாரா.. அடுத்த சில ஆண்டுகளில் நடுத்தெருவிற்கு வந்தது எப்படி?
லண்டன்: பிரிட்டனை சேர்ந்த லாரா என்ற பெண்ணுக்கு லாட்டரியில் கடந்த 2005ம் ஆண்டு அந்த நாட்டு நாணய மதிப்பில் 1.8 மில்லியன் ஜாக்பாட் அடித்தது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. ஆனால் அப்படி கோடீஸ்வரியான லாராவின் வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகளில் கனவில எதிர்பார்க்காத அளவிற்கு நரகத்திற்கு போனது.. என்ன நடந்தது.. எப்படி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதை பார்ப்போம்.
பலருக்கு லாட்டரியில் பரிசு வெல்ல வேண்டும் என்பது பெருங்கனவாக இருக்கும். அதில் ஒரு சிலருக்கே அதிர்ஷ்டம் அடிக்கும். ஒரு முறை அதிர்ஷ்டம் அடித்தவருக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடிப்பது மிக அபூர்வம் என்பதால் தான் அதனை அதிர்ஷ்ம் என்றே அழைக்கிறார்கள். லாட்டரியில் குலுக்களில் எந்த எண் வரும் என்று யாருக்குமே தெரியாது.. கோடிக்கணக்கான மக்களில் யாரோ ஒருவருக்கு பம்பர் பரிசாக பல கோடி கிடைக்கும். உதாரணத்திற்கு அண்மையில் கேரளாவில் லாட்டரி வாங்கி கர்நாடாகவைச் சேர்ந்த பைக் மெக்கானிக் நபருக்கு பல கோடி பரிசு விழுந்தது. இப்படி பலருக்கு பரிசு விழுந்துள்ளது.

கேரளாவில் மட்டுமல்ல பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு விழுகிறது. அப்படித்தான் பிரிட்டன் நாட்டின் மேற்கு யார்க்ஷையரைச் சேர்ந்த லாரா க்ரிஃபிதஸ் என்ற பெண்ணுக்கு, கடந்த 2005 இல் £1.8 மில்லியன் ஜாக்பாட் (சுமார் ரூ. 20 கோடி) விழுந்தது. ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தாலும். அதன்பிறகு வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழக்க போகும், கனவிலும் நினைத்து பார்க்க நகரத்தின் தொடக்கம் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை..
லாராவிற்கு 20 கோடி ரூபாய் பரிசு வாங்கும் முன்பு வரை தகணவர் ரோஜர் மற்றும் மகள்கள் ரூபி, கிட்டி ஆகியோருடன் சாதாரணமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அப்போது லாரா, ரோஜர் தம்பதியின் வயது 30 ஆக இருந்தது.. ஆனால் பரிசை வென்ற பின், தங்கள் வாழ்க்கை தலைகீழாகப் போகிறது என்று தெரியவில்லை. லாட்டரியில் வென்ற பரிசு தொகையால், ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த லாராவும், ஐடி மேலாளரான ரோஜரும் திடீரென நினைத்துப் பார்க்க முடியாத செல்வந்தர்களாக மாறினார்கள்..
புதிதாகக் கிடைத்த அதிர்ஷ்டத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவித்த தம்பதிகள், ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு மாறினார்கள். அவர்கள் வேலையை விட்டுவிட்டு, 450,000 பவுண்டுகள் மதிப்புள்ள (சுமார் ரூ. 4.8 கோடி) சொகுசு வீட்டை வாங்கினார்கள், அத்துடன் துபாய், புளோரிடா மற்றும் பிரான்ஸ் போன்ற இடங்களுக்கு ஆடம்பர சுற்றுலா சென்றுள்ளார்கள். அத்துடன் 150,000 பவுண்டுகள் கொடுத்து (சுமார் ரூ. 1.6 கோடி) அழகு நிலையத்தையும் வாங்கி இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை இன்பமாகவே போயிருக்கிறது..
ஆனால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்படி வருமோ, அதேபோல் துரதிஷ்டமும் வரும் என்பது அவர்களின் வாழ்க்கையில் நடந்தது. அடுத்த ஒரு சில ஆண்டுகளில், லாரா கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பேரழிவினை சந்தித்தார். 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம், அவருடைய ஆடம்பர வீடு ஒரு பெரும் தீ விபத்தில் அழிந்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர்களுடைய வீட்டில் தீப்பற்றி எரிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுஙகள்..
அந்த பெருந்தீ அணைந்து முடிக்கும் போது, லாராவின் குடும்பத்தை வீடே இல்லாதவர்களாக மாற்றியது. ஒரே நாளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீட்டை இழந்தார்கள்.. வீட்டில் இருந்து நகை, பணம், உடைகள் என அவர்களுடைய சேமிப்பு எல்லாமே காலியானது. இதனால் அவர்கள் அடுத்த எட்டு மாதங்கள், ஹோட்டல்களிலும், லாராவின் தாயாரின் வீட்டில் இருந்தனர். தீயில் கருகிய வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
2011 ஆம் ஆண்டின் ஜூன் மாதவாக்கில் அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய வீட்டிற்குச் செல்ல முடிந்தது என்றாலும், முன்பைவிட நிலைமை மோசமாகினது. லாரா தனது கணவர் ரோஜரை பிரிந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் 2013 வாக்கில் விவாகரத்தும் செய்தார். லாராவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் அவருடைய வாழ்க்கையில் நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருந்துள்ளது. கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்து தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் தவித்தார். 2013 டிசம்பரில் விவாகரத்து முடிவானபோதே லாராவிடம் ஒன்றுமே இல்லாமல் போனது. ஒரு காலத்தில் பணக்கார தம்பதிகளாக இருந்த லாராவும் ரோஜரும் தங்கள் வீட்டையும் அழகு நிலையத்தையும் விற்க வேண்டியிருந்தது. மேலும் அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த ஆடம்பரம் இல்லாமல் மொத்தமாக முடிவுக்கு வந்தது.
தீயில் வீடு மட்டுமல்ல.. லாராவின் சொகுசு வாழ்க்கையும் பொசுங்கி போனது.. அவரது மகள் ரூபி, தீயின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இன்றும் மனதளவில் போராடி வருகிறார். எல்லாமே தன்னை விட்டு போன போதும்.. லாரா தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.. லாரா தனது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களான, ரூபி 20, மற்றும் கிட்டி 17 ஆகியோருடன் ஒரு சாதாரண வீட்டில் வசிக்கிறார். வாழ்க்கை கடினமாக இருந்தாலும், தன் குழந்தைகளை கவனித்துக் கொண்டு வேலைக்கு சென்று வாழ்ந்து வருகிறார். எல்லாமே இழந்து நடுத்தெருவிற்கு வந்த பிறகும் லாராவிற்கு எந்த வருத்தமும் இல்லையாம்.. லாராவின் கதையில் அறிய வேண்டிய பாடம் என்னவென்றால், செல்வம் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது. அதேநேரம் சில சமயங்களில் அதிர்ஷ்டத்தின் விலை யாரும் கற்பனை செய்வதை விட மிக மோசமானதாகவே இருக்கும் என்பதே ஆகும்.












Click it and Unblock the Notifications