நடிகர் டி ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.. அமெரிக்காவில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்கள் டிரென்ட்!
லண்டன்: இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து லண்டனில் இருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, அடுக்கு மொழி பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் தனது படங்களில் மகன் சிலம்பரசனை குழந்தை முதலே அறிமுகப்படுத்தினார்.
தற்போது சிம்பு பெரிய நடிகராக உள்ளார் என்றால் அதில் டி ராஜேந்தருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டி ராஜேந்தர் ரசிகர்கள்
இதனால் டி ராஜேந்தரின் ரசிகர்களும் சிம்பு ரசிகர்களும் கவலை கொண்டனர். அவருக்கு என்னாச்சு என தெரியாமல் தவித்தனர். இதையடுத்து நடிகர் சிம்பு கடந்த மே 24 ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனது தந்தைக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

நலம்
அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என ட்விட்டரில் சிம்பு அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். இதையடுத்து டி ராஜேந்தரை போரூர் மருத்துவமனைக்கே நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து வெளிநாட்டுக்கு டி ராஜேந்தரை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் டி ராஜேந்தர்
முதலில் சிம்பு அமெரிக்கா சென்று அங்கு டி ராஜேந்தருக்கு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதையடுத்து டி ராஜேந்தர், மனைவி உஷா, இளைய மகன் குறளரசன் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்தர், நான் நலமுடன் திரும்பி வருவேன் என நம்பிக்கையுடன் கூறினார்.

புகைப்படம்
இந்த நிலையில் அமெரிக்காவில் டி ராஜேந்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது புகைப்படம் வைரலாகியுள்ளது. உஷா, டி ராஜேந்தர், சிம்பு ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்க்கும் போது டி ராஜேந்தரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவே தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications