ஐரோப்பிய நாடுகளில்... இன்று கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு..?
லண்டன்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இங்கிலாந்தில் இன்று ஒரே நாளில் 684 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீள உலக நாடுகள் அனைத்தும் தங்களால் முயன்ற ஆகச்சிறந்த அத்தனை வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றன. அப்படியிருந்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியாமல் பல உலக நாடுகளும் தடுமாறுகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது தான் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,935-ஐ எட்டியுள்ளது. அதாவது இன்று மட்டும் ஸ்பெயினில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 587 ஆகும். மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 710 பேருக்கு ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 30,513 பேர் இந்த கொடிய நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேபோல் ஈரானில் 53,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த 3294 பேர் ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர், அதில் இன்று மட்டும் 134 ஆகும். மேலும், நெதர்லாந்தை பொறுத்தவரை 15,723 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 250 பேர் பரிபூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1487 பேர் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1143, அதில் இன்று மட்டும் என கணக்கில் எடுத்தால் 132 ஆகும். மொத்தம் 16,770 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,872 பேர் இந்த நோயிலிருந்து பெல்ஜியத்தில் மீண்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications