"குலை நடுங்குதே".. ஹேப்பி கிறிஸ்துமஸ்.. துண்டு துண்டாய் தலைகள்.. அசராத சவுதி அரேபியா.. என்னாச்சு
சவுதி அரேபியா மீது இங்கிலாந்து எம்பிக்கள் முக்கிய குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளனர்
லண்டன்: உலகமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம், சவுதி அரேபியா ரகசியமாக மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. இப்படி ஒரு குற்றச்சாட்டை வீசியிருப்பது இங்கிலாந்து எம்பிக்கள் என்பதால், உலக கவனம் சவுதி அரேபியா பக்கம் குவிந்து வருகிறது.. என்ன நடந்தது சவுதியில்?
மரண தண்டனை என்ற வார்த்தையை உச்சரித்தாலே, நம் அனைவரது கவனமும் சவுதி அரேபியா பக்கம் செல்வதை தவிர்க்க முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை என்றாலே அது மரணதண்டனை என்றே அந்நாட்டில் பதிந்து விட்டது.
கொலைக் குற்றவாளிகள், போதைமருந்து கடத்தல் தொடர்பில் தண்டிக்கப்பட்டவர்கள், பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு இத்தகைய தண்டனைகள் கிடைக்கின்றன.

நோ தகவல்
எனவே, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சவுதி அரேபியாவில் சமீப காலங்களாகவே அதிகரித்து வருகிறது.. ஆனால், பெரும்பாலும், மரணதண்டனை நிறைவேற்றப்படும் வரை, அந்த விவரங்களை அரசு வெளியிடுவது கிடையாதாம்.. அதனால், இவர்களின் மரண தண்டனை நிறைவேறிய பிறகுதான், சம்பந்தப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கு அரசு ஊடக அறிக்கைகள் மூலம் தெரியவருவதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கடைசி நிமிடங்களில் தங்களின் உறவினரின் உடனிருக்கும், அரசு தரப்பில் அனுமதி கிடைப்பதில்லையாம்.. தலையை வெட்டுவது பிரதான மரண தண்டனையாக உள்ளது..

குலைநடுங்குதே
கடந்த வருடம் மொத்தம் 69 பேர்களுக்கு மட்டுமே மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 144 பேர்களுக்கு சவுதி நிர்வாகம் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும், கடந்த மார்ச் மாதம் மட்டும், பயங்கரவாதம் தொடர்புடைய நபர்கள் என்று சொல்லி, 81 பேர்களுக்கு ஒரே நாளில் மரணதண்டனை நிறைவேற்றியது சர்வதேச நாடுகளின் கவனத்தை அதிர்ச்சியுடன் ஈர்த்திருந்தது.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனை தி டெலிகிராப் செய்தியாக வெளியிட்டுள்ளது..

கசிந்த மேட்டர்
உலகம் முழுவதும் நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்து வந்தன.. அந்த சமயத்தில், பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது என்று இங்கிலாந்து எம்பிக்கள் குழு வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லிக்கு கடிதம் எழுதியுள்ளாராம்.. ஹிலாரி பென், டேவிட் டேவிஸ், ஆண்டி ஸ்லாட்டர், சர் பீட்டர் பாட்டம்லி, அலிஸ்டர் கார்மைக்கேல் ஆகியோர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்..

ராஜதந்திரம்
அந்தக் கடிதத்தில், "தங்களுடைய தவறுகளை மறைக்க சவுதிஅரேபிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்... உலக மக்களின் கவனம் வேறு திசையில் இருக்கும்போது, இதனை நிறைவேற்ற திட்டமிட்டும் உள்ளனர். இதனால் சவுதி அதிகாரிகள் குறைந்த ராஜதந்திர பின்னடைவை சந்திக்க நேரிடும்.. சவுதி அரேபியா விடுமுறை காலத்தில், வெகுஜன மரணதண்டனைகளை நிறைவேற்றக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். பண்டிகை மற்றும் புத்தாண்டு காலங்களில் சர்வதேச சமூகம் விரைவாக பதிலளிப்பது கடினமாக இருக்கும்போது, மரண் தண்டனையை சவுதி நிறைவேற்றி விடுகிறது..

தலையை சீவினர்
இப்படித்தான், கடந்த 2016 மற்றும் 2020ம் ஆண்டுகளில் மரணதண்டனைகளை சவுதி அரேபியா நிறைவேற்றியிருக்கிறது.. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதால்தான், விடுமுறைக்கு முன்னதாகவே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.. கடந்த 2 வாரங்களில் மட்டும், சவுதி அரேபியாவில் 20 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.. அவர்களில் 12 பேர் வெளிநாட்டவர்கள்... ஃபிபா உலகக் கோப்பை 2022ல் உலகமே ஆர்வத்துடன் இருக்கும் சமயத்தில், சவுதி இந்த மரணதண்டனைகளை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.. என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேப்பி கிறிஸ்துமஸ்
உலக கோப்பை கால்பந்து போட்டியை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சவுதி அரேபியா 20 பேருக்கு மரண தண்டனை விதித்து விட்டதாகவும் அதில் 12 பேர் வெளிநாட்டவர் என்றும் புது தகவல் வெளியாகி உள்ளது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. மேலும், உலகமே கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடி வரும்போது, சவுதி அரேபியா நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து எம்பிக்கள் மற்றொரு பகீரையும் கிளப்பி உள்ளது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது...!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications