ஹார்முஸ் ஜலசந்தியை ஏன் மூடுறீங்க? ஈரானுக்கு எதிராக திரண்டு வந்த பிரிட்டன் - பிரான்ஸ் உள்பட 6 நாடுகள்
லண்டன்: அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் போர் நடவடிக்கையால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் கேஸ் சப்ளையை முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பலவும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. இது ஒரு கடல் வழிப்பாதை.
இந்த கடல்வழிப்பாதை வழியாக தான் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் கப்பல்கள் பிற நாடுகளுக்கு செல்லும். தற்போது அந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் தினமும் நடக்கும் கச்சா எண்ணெய், கேஸ்வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும். தற்போது அது முடங்கி உள்ளது.
ஈரானுக்கு எதிராக 6 நாடுகள்
அதேபோல் பிற நாடுகளிடம் இருந்து இந்த பாதை வழியாக தான் உணவு உள்பட அத்தியாவசியத்துக்கு தேவையான பொருட்கள் அரபு நாடுகளுக்கு செல்லும். ஈரானின் இந்த செயலால் அரபு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் இந்த நாடுகளை ஈரான் தாக்கும் நிலையில் இன்னொரு புறம் ஹர்முஸ் ஜலசந்தியில் தடைப்பட்ட கப்பல் போக்குவரத்தால் இரண்டு பிரச்சனைகளை அந்த நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தான் ஈரான் சர்வதேச சட்டங்களை மதித்து செயல்பட வேண்டும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதற்கு கனடாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் ஈரானுக்கு புதிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தாக்குதல்களை நிறுத்த வேண்டும்
''ஈரான் தனது அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும். கடலில் கண்ணிவெடிகள் புதைத்தல், ட்ரோன் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள், வணிக கப்பல்களின் போக்குவரத்தை தடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 2817-க்கு இணங்கி செயல்பட வேண்டும். ஏனென்றால் ஐக்கிய நாடுகளின் கடலுக்கான சட்டம், சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கையாக சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல்
சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை சீர்க்குலைக்கிறது. ஈரானின் தற்போதைய நடவடிக்கைகள் உலகெங்கிலும் மக்களை பாதிக்கும். அதோடு சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்கு உடனடியாக விரிவான தடை விதிக்கக் கோருகிறோம்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கனும்
கடல்சார் பாதுகாப்பும் கப்பல் போக்குவரத்து சுதந்திரமும் அனைத்து நாடுகளுக்கும் நன்மை பயக்கும். சர்வதேச சட்டத்தை மதித்து, சர்வதேச செழிப்பு மற்றும் பாதுகாப்பின் அடிப்படை கொள்கைகளை மதிக்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவு
இந்த விஷயத்தில் எங்களை போல் திட்டமிட்டு வரும் நாடுகளின் உறுதி மனப்பான்மையை வரவேற்கிறோம். ஐஇஏ எனும் சர்வதேச எரிசக்தி முகமையின் முடிவை வரவேற்கிறோம். எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்த,சில உற்பத்தி நாடுகளுடன் இணைந்து கச்சா எண்ணெய், கேஸ் உற்பத்தியை அதிகரிப்போம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் (IFIs) மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவு அளிப்போம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications