புதைந்துள்ள ரத்த வரலாறு! மீண்டும் கிளம்பிய "கோஹினூர்" வைர விவாதம்.. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடைபெறும் நிலையில், இப்போது அரச குடும்பத்திடம் இருக்கும் நகைகள் குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது.
இன்று பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது. சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே நடைபெறும் முடிசூட்டு விழாவிற்காக ஒட்டுமொத்த பிரிட்டனும் கோலாகலமாக ரெடியாகி வருகிறது.
இந்த விழாவில் கேன்டர்பரியின் பேராயர், தவறானதைத் தண்டிக்கவும், சீர்திருத்தவும், நல்லதை உறுதிப்படுத்தவும் மன்னர் சார்லஸுக்கு உறுதிப்படுத்துவார். இது வெறும் சொற்றொடர் மட்டும் இல்லை.. இது பிரிட்டன் மன்னருக்கும் பிரிட்டிஷ் மக்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் போன்றதாகும்.

பிரிட்டன் அரசு: இருப்பினும், இதை யாரும் பெரும்பாலும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில், விலைமதிப்பற்ற ரத்தினங்கள், நகைகள் விவகாரத்தில் பிரிட்டன் அரசு சரியான நடவடிக்கையைச் செய்ய வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தே வருகிறது.
பிரிட்டன் அரச குடும்பத்தின் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய வரலாற்றைக் குறிப்பதாக செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் (இம்பீரியல் ஸ்டேட் கிரவுன்), செங்கோல் மற்றும் மறைந்த ராணி எலிசபெத்தின் கிரீடம் உள்ளன. காலனித்துவத்தின் அடையாளங்களாக குல்லினன் மற்றும் கோஹினூர் வைரம் உள்ளிட்ட பல ஆயிரம் நகைகள் உள்ளன.
இந்த வைரங்கள் ஒரு வலி மிகுந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்த மோசமான வரலாறு இருக்கும் போதிலும், இதில் இரண்டு வைரங்கள் சார்லஸின் முடிசூட்டு விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த வரலாற்றை அரச குடும்பம் அறிந்தே இருக்கிறது இதன் காரணமாகவே கோஹினூர் வைரத்தை மட்டுமாவது முடிசூட்டு விழாவில் அவர்கள் சேர்க்கவில்லை.

கோஹினூர் வைரம்: பிரிட்டனின் காலனித்துவ வரலாறு குறித்த விவாதங்களுக்கு மத்தியில் கோஹினூர் வைரத்தைத் தெற்காசியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், அரச குடும்பம் இதைத் திரும்பி அனுப்பும் மனநிலையிலும் இல்லை. மாறாக இதில் பல நகைகள் முழுமையாகக் காட்சிக்கு வைக்கப்படும்.. செயின்ட் எட்வர்ட் கிரீடம், இறையாண்மை செங்கோல், வாள் மற்றும் ஆகியவை முடிசூட்டு விழாவில் வைக்கப்படும்.
இவை எல்லாம் பிரிட்டன் மக்கள் மத்தியில் அரச குடும்பத்தின் மீது ஒரு பற்றை ஏற்படுத்த உதவும். எதிர்காலத்தில் முடியாட்சி மற்றும் அரச குடும்பத்திற்கு ஆபத்து உள்ள நிலையில், அதை இப்படிச் செய்து சமாளிக்கவே அவர்கள் முயல்கிறார்கள். இருப்பினும், பிரிட்டன் முடியாட்சி உலக நாடுகளிடம் இருந்து கொள்ளையடித்த நகைகளை அந்தந்த நாடுகளுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதமும் அதிகரித்தே உள்ளது.
விலைமதிப்பற்ற வைரங்கள்: குறிப்பாக, செயின்ட் எட்வர்டின் கிரீடம், இம்பீரியல் கிரீடம், செங்கோல் ஆகியவை மோசமான பிரிட்டன் ஆதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது.. கல்லினன் I மற்றும் கல்லினன் II வைரங்கள் பிரிட்டனின் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அடையாளமாகும். இந்த இரண்டு விலைமதிப்பற்ற வைரங்கள் முடிசூட்டு விழாவில் இடம்பெறும் செங்கோல் மற்றும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் உள்ளன.

1849ஆம் ஆண்டு 10 வயது மகாராஜா துலீப் சிங்கிடம் இருந்து கோஹினூர் வைரம் பிரிட்டன் அரச குடும்பம் வசம் சென்றது.. 1937இல் அவரது முடிசூட்டு விழாவுக்கு மறைந்த ராணி எலிசபெத் கிரீடத்தில் அது வைக்கப்பட்டது. .
இது சார்லஸின் முடிசூட்டு விழாவில் இருக்காது என்ற போதிலும், அது இன்னும் கிரீட நகைகளில் உள்ளது.. கிங் சார்லஸ் தன்னை மாற்றத்திற்கான நபராகக் காட்டிக் கொள்ளும் நிலையில், மற்ற நாடுகளுக்குச் சொந்தமான நகைகளைத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற விவாதமும் அதிகரித்தே இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications