போச்சே, போச்சே.. ஜீரணிக்கவே முடியல.. நம்ம "கோஹினூர் வைரம்" யார்கிட்ட போக போகுதுன்னு பாருங்க..!
கோஹினூர் வைரம் கமீலாவுக்கு வந்தடைய போவதாக கூறுகிறார்கள்
லண்டன்: திடீரென கோஹினூர் வைரம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.. அதுவும் இங்கிலாந்தில் இருந்து பரபரப்பு தகவல் ஒன்று இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது..
கோஹினூர் வைரம் என்பது என்ன?
14ம் நூற்றாண்டில் இந்தியாவின் ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதுதான் இந்த கோஹினூர் வைரம்... மொத்தம் 105 காரட் மதிப்பு கொண்டது. இதை 'ஒளியின் மலை' என்று சொல்வார்கள்..
இந்த வைரம்தான் இப்போதைக்கு உலகிலேயே மிகப்பெரிய வைரமாம்.. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி கைமாறி கடைசியில் 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்ததாக சொல்கிறார்கள்.

வைரம்
ஆனால், இந்த வைரத்தை பற்றி எத்தனையோ கற்பனை கதைகள் வெளிவந்து கொண்டே இருக்கும்.. அதில் எது உண்மை என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.. இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசு கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ஒரு தரப்பு சொல்கிறது.. பிரிட்டிஷ் மன்னர் பரம்பரைக்கு பரிசாக இந்த வைரம் வழங்கப்பட்டது என்று இன்னொரு தரப்பு சொல்கிறது..

மணிமகுடம்
ஒருகட்டத்தில் மகாராணியின் மகுடத்திலுள்ள இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டுமென்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்போது கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை, அது அன்பளிப்பாகவே கொடுக்கப்பட்டது, பரிசாக கொடுப்பதை திருப்பி கேட்க முடியாது என்று மத்திய அரசு சொல்லிவிட்டது... 1849ல் லாகூர் மன்னராக இருந்த துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டீஷ் அரசிக்கு பரிசாக தரப்பட்டதாம்..

இங்கிலாந்து ராஜகுடும்பம்
1937ல் நான்காம் ஜார்ஜ் மன்னராக பதவியேற்றபோது, அவர்களின் கிரீடத்தில் கோஹினூர் வைரமும் சேர்க்கப்பட்டது.. அதற்கு பிறகு இங்கிலாந்து ராஜகுடும்பத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகவும் கோஹினூர் வைரம் மாறிப்போய்விட்டது. ஆனாலும் இந்திய மக்களின் மனசே ஆறவில்லை.. எங்களிடம் இருந்து கொண்டு போன பொக்கிஷத்தை எங்களிடமே தந்துவிடுங்கள் என்று கோரிக்கைகள் இன்னமும் ஒலித்து கொண்டுதானிருக்கிறது.. இப்போது திடீரென கோஹினூர் வைரத்தை பற்றின பேச்சு ராஜவம்சத்திலிருந்து கிளம்பி உள்ளது.

முடிசூட்டும் விழா
இங்கிலாந்து மகாராணியான 2-ம் எலிசபெத், அவரது முடிசூட்டி கொண்டதன் 70-ம் ஆண்டு விழாவினை சமீபத்தில் கொண்டாடியிருந்தார் இல்லையா.. அப்போது திடீரென சார்லஸின் மனைவியான கமீலா மீது ராணிக்கு கரிசனம் வந்துள்ளது.. இளவரசி டயானா என்ற மனிதாபிமானமிக்க பெண்ணின் வாழ்வை பங்குபோட்டுக் கொண்டதே இந்த கமீலாதான்.. டயானா என்ற அழகுசிலை உருக்குலைந்து விபத்தில் இறக்கும் அளவுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை புரட்டி போட்டதே இந்த கமீலாதான் என்பார்கள்..

டயானா
டயானா இறந்தபிறகு, சார்லஸ் கமீலாவை அரண்மனையில் அழைத்து கொண்டார்.. வசதிவாய்ப்புகளற்ற டயானாவை, ராணிக்கு அவ்வளவாக பிடிக்காது.. ஆனால், கமீலா ராணியின் விருப்பத்துக்கு உரியவராக மாறிப்போனார்... அதனால் அடிக்கடி அவர் மீது பாசத்தை பொழிந்துவிடுவார்.. அப்படித்தான் இப்போதும் ஒரு அறிவிப்பு செய்துள்ளார் ராணி.. "உரிய காலம் வரும்போது இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொள்வார். அப்போது கமீலா இங்கிலாந்து ராணியாவார்" என்று ராணி எலிசபெத் கூறியுள்ளார்..

சார்லஸ்
அதாவது எலிசபெத் ராணிக்கு பிறகு, இந்த விலைமதிப்பற்ற வைரம் பதித்த கிரீடம் ராணியால் கமீலாவுக்கு ஒப்படைக்கப்படும் என்று லண்டன் செய்திகள் உறுதிபடுத்தி உள்ளன.. இளவரசர் சார்லஸின் முடிசூட்டு விழாவின்போது கமிலா ராணியாக முடிசூட்டிக் கொள்ளும்போது இந்த கிரீடம் அவரிடம் ஒப்படைக்கப்படுமாம்.. யார் வீட்டு சொத்தை யாரெல்லாம் அனுபவிக்கிறார்கள் பார்த்தீங்களா? என்றைக்காவது ஒருநாள் நம்முடைய பொக்கிஷம் நம்மிடமே வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இன்னமும் இந்தியர்களிடம் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது..!
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications