அடேங்கப்பா.. இங்கிலாந்து வரலாறு காணாத தொகை! துபாய் மன்னரின் 6-வது மனைவிக்கு ரூ.5,525 கோடி ஜீவனாம்சம்
லண்டன்: துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித்தின் 6ஆவது மனைவி ஹயா பினட்டுக்கு ரூ 5,525 கோடி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (72). இவரது 6ஆவது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன் (47). இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா, மன்னர் அப்துல்லாவின் உறவினர் பெண் ஆவார்.
இந்த நிலையில் அரசருக்கும் மனைவி ஹயாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஹயா கடந்த மே மாதம் முதல் தலைமறைவானார்.

கட்டாயத் திருமணம்
இந்த நிலையில் ஹயா பின்ட் தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாக புகார் கூறிய ஹயா, பாதுகாப்பு கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவாகரத்து விசாரணை நடந்த போது தனது குழந்தைகளை துபாய்க்கு அனுப்புமாறு அரசர் ஷேக் முகமது தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

லண்டன் நீதிமன்றம்
ஆனால் இந்த கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கு விசாரணையின் போது ஹயா கூறுகையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். குழந்தைகளுக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் வாக்குமூலம் அளித்தார்.

லண்டன் தீர்ப்பு
இதையடுத்து ஹயா தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் துபாய் அரசர் ஷேக் முகமது ஜீவானாம்சமாக ஹயா பின்ட் மற்றும் 2 குழந்தைகளுக்கு 550 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ 5,525 கோடி) வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமண வாழ்க்கை
இந்த வழக்கில் நீதிபதி கூறுகையில் பாதுகாப்பை தவிர ஹயா வேறு எந்த அங்கீகாரத்தையும் கேட்கவில்லை. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக ஹயா இழந்த சொத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஹயாவின் பிரட்டிஷ் மாளிகையை பராமரிக்கவும் குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, பெரியவர்கள் ஆனதும் அவர்களது பராமரிப்புக்காகவும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றார்.

3 மாத காலம்
இந்த பணத்தை 3 மாத காலத்திற்குள் ஹயாவிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். குழந்தைகளின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 11.2 மில்லியன் பவுண்டுகளை வழங்க வேண்டும். இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய ஜீவனாம்சம் தொகையாக கருதப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications