Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் ஒரு பேய்".. 7 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து.. இங்கிலாந்தை அதிரவைத்த நர்சு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த நர்சு ஒருவர் தான் பணியாற்றி வந்த மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் தான் ஒரு "பேய்" எனவும் தனது டைரியில் எழுதி வைத்து இருக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த நர்சு லூசி லெட்பி (வயது 33). இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் பகுதியில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் நர்சாக இவர் பணியாற்றி வந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் வேலை செய்து வந்த லூசி லெட்பி, 7 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். 2018ஆம் ஆண்டு ஜுலையில், பச்சிளம் குழந்தை ஒன்றை கொலை செய்ய முயற்சித்த போது போது சக மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Lucy Letby, the British nurse convicted for the murder of seven newborn babies in one year

அதன்பேரில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பின்னரே லூசியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, குழந்தைகளின் கைகளில் காற்றை ஏற்றி கொலை செய்வது, இன்சுலின் செலுத்தி கொல்வது என கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இரட்டை குழந்தைகள் மற்றும் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளை டார்கெட் செய்து தனது கொடூர எண்ணத்தை நர்சு லெட்பி வெளிப்படுத்தியுள்ளார்.

கைதாகி வழக்கு விசாரணை நடைபெற்ற போது போலீசார் அந்த நர்சின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். குறிப்பாக ஒரு ஆவணத்தில், "நான் ஒரு பேய், நானே கொலை செய்தேன். நான் மிகவும் மோசமான நபர்" என எழுதி வைத்துள்ளார். இந்த கோப்புகளை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது தன் மீதான குற்றத்தை லெட்பி மறுத்தார். எனினும், லெட்பி பணியில் இருந்த போதுதான் குழந்தைகள் மரணம் அதிகரித்ததாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை லூசி ஒப்புக்கொள்ளவில்லை. பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பி குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர்களின் நம்பிக்கைக்கு செய்யப்பட்ட துரோகம் இது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பாஸ்கல் ஜோன்ஸ் வாதிட்டார்.

22 நாட்கள் இந்த வழக்கின் வாதங்கள் நடைபெற்ற நிலையில், லெட்பியின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. 7 குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் 6 குழந்தைகளை கொலை செய்ததது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள லூசி லெட்பிக்கான தண்டனை விவரம் வரும் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+